ஷ்ரேயஸ், இஷான் அதிரடி; இந்தியா பதிலடி 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது ஒன் டே ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது. 
ஷ்ரேயஸ், இஷான் அதிரடி; இந்தியா பதிலடி 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது ஒன் டே ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது. 

ஆட்டத்தில் முதலில் தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 278 ரன்கள் சேர்த்தது. அடுத்து இந்தியா 45.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து வென்றது. 

முதல் ஒன் டேயில் கண்ட தோல்விக்கு இதில் பதிலடி கொடுத்துள்ள இந்தியா, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை தற்போது 1-1 என சமன் செய்துள்ளது. 

முன்னதாக, பிளேயிங் லெவனில் இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய்க்குப் பதிலாக ஷாபாஸ் அகமது (அறிமுகம்), வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டனர். தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் டெம்பா பவுமா, டப்ரைஸ் ஷம்ஸி ஆகியோருக்குப் பதிலாக ஜோர்ன் ஃபோர்டுயின், ரீஸô ஹெண்ட்ரிக்ஸ் களம் கண்டனர். 

டாஸ் வென்று பேட் செய்த தென்னாப்பிரிக்காவில் எய்டன் மார்க்ரம் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 79, ரீஸô ஹெண்ட்ரிக்ஸ் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 74 ரன்கள் விளாசினர். குவின்டன் டி காக் 5, யானேமன் மலான் 25, ஹென்ரிச் கிளாசென் 30, வெய்ன் பார்னெல் 16, கேப்டன் கேசவ் மஹராஜ் 5 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனர். ஓவர்கள் முடிவில் டேவிட் மில்லர் 35, ஜோர்ன் 0 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில் முகமது சிராஜ் 3, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 

பின்னர் இந்திய இன்னிங்ஸில் கேப்டன் ஷிகர் தவன் 13, ஷுப்மன் கில் 28 ரன்களுக்கு வெளியேற, 3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த இஷான் கிஷண் - ஷ்ரேயஸ் ஐயர் கூட்டணி 161 ரன்கள் விளாசி அசத்தியது. இதில் சதத்தை நெருங்கி இஷான் 4 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 93 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து சஞ்சு சாம்சன் துணை நிற்க, ஷ்ரேயஸ் ஐயர் சதமடித்ததுடன் அணியை வெற்றிக்கு வழி நடத்தினார். 

முடிவில் ஷ்ரேயஸ் 15 பவுண்டரிகளுடன் 113, சஞ்சு சாம்சன் 30 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென்னாப்பிரிக்க பெüலிங்கில் ஜோர்ன், வெய்ன், ரபாடா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

அடுத்து: இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் 3-ஆவது ஒன் டே தில்லியில் செவ்வாய்க்கிழமை (அக். 11) நடைபெறுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com