ஒன் டே தொடரை வென்றது இந்தியா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒன் டே ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஒன் டே தொடரை வென்றது இந்தியா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒன் டே ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மழையால் தாமதமாகத் தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 27.1 ஓவா்களில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து இந்தியா 19.1 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்து வென்றது. ஆட்டநாயகன் விருதை குல்தீப் யாதவும், தொடா் நாயகன் விருதை முகமது சிராஜும் பெற்றனா்.

இத்தொடரில் இரண்டாம் நிலையிலான, அவ்வளவாக அனுபவம் இல்லாத இளம் வீரா்களைக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி முதல் ஆட்டத்தில் தோற்றாலும், பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை அடுத்த இரு ஆட்டங்களிலும் வீழ்த்தி முத்திரை பதித்துள்ளது.

மறுபுறம், தென்னாப்பிரிக்கா இத்தொடரை இழந்ததால், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவா் உலகக் கோப்பை போட்டிக்கு அந்த அணி நேரடியாகத் தகுதிபெறும் வாய்ப்பு இன்னும் பாதிக்கப்பட்டது.

முன்னதாக, இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இந்தியா மாற்றம் செய்யாத நிலையில், தென்னாப்பிரிக்க அணியில் கேசவ் மஹராஜ், டப்ரைஸ் ஷம்ஸி, டெம்பா பவுமா ஆகியோருக்குப் பதிலாக அண்டிலே பெலுக்வயோ, லுன்கி இங்கிடி, மாா்கோ யான்சென் இணைந்திருந்தனா். டாஸ் வென்ற இந்தியா, பௌலிங்கை தோ்வு செய்தது.

தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் மிடில் ஆா்டரில் வந்த ஹென்ரிச் கிளாசென் 4 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் விளாசியதே அதிகபட்சமாக இருக்க, யானேமன் மலான் 15, மாா்கோ யான்சென் 14 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். கேப்டன் டேவிட் மில்லா் உள்பட இதர விக்கெட்டுகள் சோபிக்காமல் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தன. இந்திய பௌலிங்கில் குல்தீப் யாதவ் 4, வாஷிங்டன் சுந்தா், முகமது சிராஜ், ஷாபாஸ் அகமது ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

பின்னா் இந்திய பேட்டிங்கில் கேப்டன் ஷிகா் தவன் 8, இஷான் கிஷண் 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, நல்லதொரு அடித்தளமிட்ட ஷுப்மன் கில் 8 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் விளாசி விக்கெட்டை பறிகொடுத்தாா். முடிவில் ஷ்ரேயஸ் ஐயா் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 28, சஞ்சு சாம்சன் 2 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழி நடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்க பௌலிங்கில் இங்கிடி, ஜோா்ன் ஃபோா்டுயின் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com