தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா செல்லும் மூன்று இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள்!

அக்டோபர் 6 முதல் ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் இந்திய அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

News image
Updated On :12 அக்டோபர் 2022, 3:18 pm IST

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியினருடன் ஷமி, சிராஜ், ஷர்துல் தாக்குர் ஆகிய மூன்று வீரர்களும் விரைவில் இணையவுள்ளார்கள்.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

காயம் காரணமாக டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பும்ரா விலகியதால் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரின் பெயரை பிசிசிஐ விரைவில் அறிவிக்கவுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய அணியினருடன் வேகப்பந்து வீச்சாளர்களான ஷமி, சிராஜ், ஷர்துல் தாக்குர் ஆகிய மூவரும் இணையவுள்ளார்கள். இதற்காக இன்று மூவரும் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்கள். மூவரில் பும்ராவுக்குப் பதிலாக யார் இந்திய அணியில் இடம்பெறுவார் என்பது இன்னும் தெரியவில்லை. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர், ரவி பிஸ்னாய், தீபக் சஹார் ஆகிய மூவரும் இன்னும் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவில்லை. முதுகு வலி காரணமாக தீபக் சஹார் இந்திய அணியில் இடம்பெற மாட்டார் எனத் தெரிகிறது. 

அக்டோபர் 6 முதல் ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் இந்திய அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது. மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தை நாளை விளையாடவுள்ளது. அதன்பிறகு பிரிஸ்பேன் சென்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் இந்திய அணி, பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதற்காக மெல்போர்ன் செல்லவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.