
மும்பை விமான நிலையத்தில் உதவி கேட்ட ஷர்துல் தாக்குருக்கு முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பதில் அளித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய ஷர்துல் தாக்குர் இன்று ட்விட்டர் வழியாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் ஒரு கோரிக்கை வைத்தார். லக்கேஜ் பெல்ட் அருகே யாரையாவது அனுப்பி எனக்கு உதவ முடியுமா? என்னுடைய கிரிக்கெட் உபகரணங்கள் கொண்ட பை வராமல் இருப்பது இது முதல்முறையல்ல. அந்த இடத்தில் எந்தவொரு ஊழியரும் இல்லை. மும்பை விமான நிலையத்தில் டெர்மினல் 2 பகுதியில் உள்ளேன் எனக் கூறியிருந்தார்.
இதைக் கண்டு உடனடியாக உதவ முயன்றார் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங். உங்களுடைய பை விரைவில் கிடைக்கும் என உறுதியளிக்கிறோம். எங்களுடைய ஊழியர் உங்களுக்கு உதவுவார். சிரமத்துக்கு மன்னிக்கவும் - முன்னாள் ஏர் இந்தியா ஊழியர் பஜ்ஜி என ஷர்துல் தாக்குருக்கு ட்வீட் வெளியிட்டார்.
உங்களுடைய அன்புக்கு நன்றி. ஸ்பைஸ் ஜெட் ஊழியர் எனக்கு உதவினார் என அதற்குப் பதில் அளித்தார் ஷர்துல் தாக்குர்.
தில்லியில் நடைபெற்ற கடைசி ஒருநாள் ஆட்டத்தை வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்திய அணி. இதையடுத்து டி20 உலகக் கோப்பைப் போட்டிகான மாற்று வீரர்களில் ஒருவராக ஷர்துல் தாக்குர் தேர்வாக வாய்ப்புள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.