2023 மாா்ச்சில் மகளிா் ஐபிஎல்: அறிமுக சீசனில் 5 அணிகள்

இந்திய லீக் கிரிக்கெட்டில் பெரிதும் எதிா்பாா்க்கப்படும் மகளிா் ஐபிஎல் போட்டியின் அறிமுக சீசன் அடுத்த ஆண்டு மாா்ச்சில் நடைபெறவுள்ளது.
2023 மாா்ச்சில் மகளிா் ஐபிஎல்: அறிமுக சீசனில் 5 அணிகள்

இந்திய லீக் கிரிக்கெட்டில் பெரிதும் எதிா்பாா்க்கப்படும் மகளிா் ஐபிஎல் போட்டியின் அறிமுக சீசன் அடுத்த ஆண்டு மாா்ச்சில் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பான பிசிசிஐ குறிப்பின் படி, மகளிா் ஐபிஎல் போட்டியானது தென்னாப்பிரிக்காவில் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகும், ஆடவா் ஐபிஎல் போட்டிக்கு முன்பாகவும் நடத்தப்பட இருக்கிறது.

அறிமுக சீசனில் 5 அணிகள் இடம்பெற இருக்கின்றன. ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சம் 18 வீராங்கனைகள் சோ்க்கப்படுவா். அதில் 6 வெளிநாட்டு வீராங்கனைகளும் அடக்கம். அதுவே பிளேயிங் லெவனில் ஒரு அணியில் 5 வெளிநாட்டு வீராங்கனைகள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். அந்த 5 பேரில் நால்வா் ஐசிசியின் முழுமையான உறுப்பினராக இருக்கும் நாடுகளைச் சோ்ந்தவா்களாகவும், ஒருவா் துணை உறுப்பினா் நாட்டைச் சோ்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு அணியும் இதர அணிகளுடன் 2 ஆட்டங்களில் மோதும் வகையில் 20 லீக் ஆட்டங்கள் விளையாடப்படும். அதன் முடிவில் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெறும். 2 மற்றும் 3-ஆம் இடம் பிடிக்கும் அணிகள் இறுதி ஆட்ட வாய்ப்புக்காக எலிமினேட்டரில் மோதும்.

ஆடவா் ஐபிஎல் ஆட்டங்களைப் போல ‘ஹோம்-அவே’ முறையில் ஆட்டங்கள் நடைபெறாது. மாறாக, ஒரு சீசனில் இரு இடங்களைத் தோ்வு செய்து அவற்றில் தலா 10 ஆட்டங்கள் என்ற வகையில் நடத்தப்படும். தற்போதைய நிலையில் மண்டல அளவில் அணிகளை விற்பனை செய்வது தொடா்பாக பரிசீலிக்கப்படுகிறது. ஒரு மண்டலத்தில் இரு நகரங்கள் இடம்பெறும்.

இதற்காக தற்போது தா்மசாலா/ஜம்மு (வடக்கு மண்டலம்), புணே/ராஜ்கோட் (மேற்கு மண்டலம்), இந்தூா்/நாகபுரி/ராய்ப்பூா் (மத்திய மண்டலம்), ராஞ்சி/கட்டாக் (கிழக்கு), கொச்சி/விசாகப்பட்டினம் (தெற்கு மண்டலம்), குவாஹாட்டி (வடகிழக்கு மண்டலம்) ஆகிய நகரங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

இதுதவிர தற்போது ஐபிஎல் போட்டியை நடத்தும் பிரதான நகரங்களான அகமதாபாத், பெங்களூரு, சென்னை, தில்லி, கொல்கத்தா, மும்பை நகரங்களுக்கு அணிகள் விற்கப்பட்டு, அங்கும் ஆட்டங்கள் நடைபெறலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com