டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

பாகிஸ்தானுக்கு எதிரான அணியை ஏற்கனவே தேர்வு செய்து விட்டேன்: ரோஹித் சர்மா 

டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான அணியை ஏற்கனவே தேர்வு செய்து விட்டேனென இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.  

News image

கோப்புப் படம்

Updated On :15 அக்டோபர் 2022, 10:40 am IST

டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான அணியை ஏற்கனவே தேர்வு செய்து விட்டேனென இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.  

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதற்காக ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பயிற்சி மேற்கொண்டிருக்கும் இந்திய அணி இதுவரை இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியுள்ளது. பிரிஸ்பேனில் மேலும் இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் இந்திய அணி முதல் உலகக் கோப்பை ஆட்டமாக அக்டோபர் 23 அன்று பாகிஸ்தானுடன் மோதுகிறது. 

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: 

கடைசி நேரத்தில் முடிவெடிப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. முன்னமே தேர்வு செய்யப்பட்ட தகவலை வீரர்களிடம் சொல்லி விடுவேன். ஏனெனில் அப்போதுதான் அவர்களால் நன்றாக பயிற்சி எடுக்க முடியும். இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் முக்கியமானதுதான். ஆனால், ஒவ்வொரு முறையும் இதைப்பற்றி பேசுவதில் எந்தவித பயனும் இல்லை. பாகிஸ்தான் வீரர்களுடன் ஆசியக் கோப்பை போட்டியின் போதும்கூட, வீட்டில் என்ன கார் வைத்துள்ளாய் , குடும்பம் எப்படியுள்ளது என்றுதான் பேசிக்கொள்வோம். 

ஷமியை இன்னும் நான் பார்க்கவில்லை. ஆனால் கேள்விப்பட்ட விஷயம் நல்லது. விரைவில் பயிற்சியின் போது சந்திப்பேன். காயத்தைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். 

சூர்ய குமார் யாதவ் எக்ஸ் ஃபேக்டராக இருப்பார். அவரது அபாரமான ஃபார்மை தக்க வைத்துக்கொள்வாரென நம்புகிறேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.