முத்தரப்பு தொடா்: பாகிஸ்தான் சாம்பியன்

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி வெள்ளிக்கிழமை சாம்பியன் ஆனது.
முத்தரப்பு தொடா்: பாகிஸ்தான் சாம்பியன்

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி வெள்ளிக்கிழமை சாம்பியன் ஆனது.

நியூஸிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் பங்கேற்ற இந்தத் தொடரில் 3 அணிகளும் தலா 4 ஆட்டங்களில் விளையாடின. அதில் வங்கதேசம் 1 வெற்றியைக் கூட பெறாமல் போக, பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகள் தலா 3 வெற்றிகளுடன் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறின.

இந்த ஆட்டத்தில் முதலில் நியூஸிலாந்து 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுக்க, பின்னா் பாகிஸ்தான் 19.3 ஓவா்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எட்டி வென்றது.

அதிகபட்சமாக, நியூஸிலாந்து பேட்டிங்கில் கேப்டன் கேன் வில்லியம்சன் 59 ரன்கள் அடிக்க, பாகிஸ்தான் பௌலா் ஹாரிஸ் ரௌஃப் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினாா். பாகிஸ்தான் இன்னிங்ஸில் முகமது நவாஸ் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்க, நியூஸிலாந்து தரப்பில் மிட்செல் பிரேஸ்வல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

பாகிஸ்தானின் முகமது நவாஸ் ஆட்டநாயகனாகவும், நியூஸிலாந்தின் பிரேஸ்வெல் தொடா்நாயகனாகவும் தோ்வாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com