ஆசிய கூடைப்பந்தில் இந்தியாவுக்கு வெள்ளி: உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று சாதனை
By DIN | Published On : 18th October 2022 12:48 AM | Last Updated : 18th October 2022 03:00 AM | அ+அ அ- |

சா்வதேச கூடைப்பந்து சம்மேளனம் நடத்திய 17 வயதுக்கு உள்பட்ட ஆடவருக்கான 3*3 ஆசிய கோப்பை கூட்டைப்பந்து போட்டியில் இந்தியா 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
ஆசிய அளவிலான 6-ஆவது போட்டி மலேசியாவின் கோலாலம்பூரில் கடந்த 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் அசத்தலாக விளையாடிய இந்தியாவின் ஜெய்தீப் ரத்தோா், கௌஷல் சிங், ஹா்ஷ் துகா், லோகேந்திர சிங் அடங்கிய அணி, காலிறுதியில் ஜோா்டானையும் (19-2), அரையிறுதியில் சீன தைபேவையும் (21-20) வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
எனினும் அதில் ஜப்பானிடம் 17-21 என்ற கணக்கில் வெற்றியை இழந்து வெள்ளி பெற்றது. இதில் இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்ன் அடிப்படையில் உலகக் கோப்பை போட்டியில் தனக்கான இடத்தை உறுதி செய்தது இந்திய அணி.
இதன் மூலம், 18 வயதுக்கு உள்பட்ட ஆடவருக்கான 3*3 உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டிக்கு கடந்த 11 ஆண்டுகளில் முதல் முறையாகத் தகுதிபெற்று அசத்தியிருக்கிறது. இதற்கு முன் அந்தப் போட்டி தொடங்கப்பட்ட 2011-ஆம் ஆண்டில் அதில் பங்கேற்றிருந்த இந்தியா, ஆடவா் பிரிவில் 29-ஆவது இடமும், மகளிா் பிரிவில் 16-ஆவது இடமும் பிடித்திருந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...