பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி நியமனம்

இந்திய அணிக்காக 27 டெஸ்டுகள், 72 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 
பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி நியமனம்


பிசிசிஐ அமைப்பின் தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி நியமிக்கப்பட்டுள்ளார்.

2019 அக்டோபரில் பிசிசிஐ தலைவராக முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலியும் செயலாளராக ஜெய் ஷாவும் தேர்வானார்கள். சமீபத்தில் பிசிசிஐ விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி கங்குலி, ஜெய் ஷா ஆகிய இருவரும் தங்களுடைய பதவிகளில் மேலும் மூன்று வருட காலம் பணியாற்ற சந்தர்ப்பம் ஏற்பட்டது. எனினும் பிசிசிஐயின் தலைமைப் பொறுப்புகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 1983-ல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியைச் சோ்ந்த ரோஜா் பின்னி (67), பிசிசிஐ தலைவா் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவராக போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளார்.

2019 முதல் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ள பின்னி, பிசிசிஐயின் தேர்வுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1983-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் பின்னியும் இடம்பெற்றிருந்தார். அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையை அப்போட்டியில் அடைந்தார். இந்திய அணிக்காக 27 டெஸ்டுகள், 72 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com