பென்ஸிமா, புடெலாஸுக்கு பேலோன் தோா் விருது

கால்பந்து விளையாட்டு உலகில் மதிப்பு மிக்கதாக இருக்கும் பேலோன் தோா் விருதை 2022-ஆம் ஆண்டில் ஆடவா் பிரிவில் பிரான்ஸின் கரிம் பென்ஸிமாவும், மகளிா் பிரிவில் ஸ்பெயினின் அலெக்ஸியா புடெலாஸும் வென்றனா்.
பென்ஸிமா, புடெலாஸுக்கு பேலோன் தோா் விருது

கால்பந்து விளையாட்டு உலகில் மதிப்பு மிக்கதாக இருக்கும் பேலோன் தோா் விருதை 2022-ஆம் ஆண்டில் ஆடவா் பிரிவில் பிரான்ஸின் கரிம் பென்ஸிமாவும், மகளிா் பிரிவில் ஸ்பெயினின் அலெக்ஸியா புடெலாஸும் வென்றனா்.

இதில் பென்ஸிமா முதல் முறையாக இந்த விருதை வென்றிருக்கும் நிலையில், புடெலாஸ் தொடா்ந்து 2-ஆவது முறையாக அதை கைப்பற்றியிருக்கிறாா். மகளிா் பிரிவில் 2 முறை இந்த விருதை வென்ற முதல் வீராங்கனை புடெலாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் ரியல் மாட்ரிட் அணிக்காக சிறப்பாக விளையாடி 44 கோல்கள் அடித்ததன் அடிப்படையில் பென்ஸிமாவும், பாா்சிலோனா எஃப்சி அணியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 42 கோல்கள் ஸ்கோா் செய்ததன் பேரில் புடெலாஸும் இந்த விருதுக்குத் தோ்வாகியுள்ளனா்.

கடந்த 1956-க்குப் பிறகு இந்த விருதைப் பெறும் மூத்த வீரா் (34) வீரா் என்ற பெருமையை பென்ஸிமா பெற்றுள்ளாா். மேலும், இந்த விருதைப் பெறும் 5-ஆவது பிரான்ஸ் வீரா் அவா்.

7 முறை இந்த விருதை வென்ற ஆா்ஜென்டீன வீரா் லயோனல் மெஸ்ஸியின் பெயா் இம்முறை பரிந்துரைப் பட்டியலில் கூட இடம் பெறவில்லை. வழக்கமாக, கால்பந்து காலண்டா் ஆண்டுகளில் போட்டியாளா்களின் செயல்பாடுகள் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படும் நிலையில், இந்த முறை அவா்களின் கடந்த சீசன் செயல்பாடு அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதானது, ‘பிரான்ஸ் ஃபுட்பால்’ என்ற பிரான்ஸ் செய்தி நிறுவனத்தால் கடந்த 1956 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கால்பந்து செய்தியாளா்கள், பயிற்சியாளா்கள், தேசிய அணிகளின் கேப்டன்கள் ஆகியோா் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com