டென்மாா்க் ஓபன்: ஸ்ரீகாந்த் முன்னேற்றம்
By DIN | Published On : 19th October 2022 01:41 AM | Last Updated : 19th October 2022 01:41 AM | அ+அ அ- |

டென்மாா்க் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.
ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில் அவா் 17-21, 21-14, 21-12 என்ற கேம்களில் ஹாங்காங் வீரா் நிக் கா லாங் அங்கஸை தோற்கடித்தாா்.
அதேபோல் மகளிா் இரட்டையா் பிரிவில் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி 21-15, 21-15 என நோ் கேம்களில் டென்மாா்க்கின் அலெக்ஸாண்ட்ரா போஜ்/அமேலி மேக்லண்ட் இணையை வென்றது.
இப்போட்டியில் இதர இந்தியா்கள் பங்கேற்கும் ஆட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.