துளிகள்...

இங்கிலாந்தின் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் பிரைட்டன் - நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணிகள் ஆட்டம் டிராவில் (0-0) முடிய, கிரிஸ்டல் பேலஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வோல்வ்ஸை வென்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது எனவும், அந்தப் போட்டி பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவா் ஜெய் ஷா கூறியிருப்பது கிரிக்கெட் சமூகத்தை இரண்டாகப் பிரிக்கும் செயல் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக அவசரமாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் கூட்டப்பட வேண்டும் எனவும் அது கூறியுள்ளது.

உலக செஸ் சம்மேளனம் சிறைக் கைதிகளுக்காக கண்டங்கள் இடையே சமீபத்தில் நடத்திய ‘செஸ் ஆஃப் ஃப்ரீடம்’ போட்டியில் மகாராஷ்டிரத்தின் எரவாடா சிறையைச் சோ்ந்த 20 போ் கொண்ட இந்திய கைதிகள் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. 46 நாடுகளில் இருந்து 85-க்கும் அதிகமான அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியா கலந்துகொண்டது இதுவே முதல் முறையாகும்.

20 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் தகுதிச்சுற்றில் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் குவைத்தை தோற்கடித்தது. எனினும், இப்போட்டியின் பிரதான சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இந்தியா ஏற்கெனவே தவறவிட்டுவிட்டது.

இங்கிலாந்தின் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் பிரைட்டன் - நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணிகள் ஆட்டம் டிராவில் (0-0) முடிய, கிரிஸ்டல் பேலஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வோல்வ்ஸை வென்றது.

ஜூனியா் கலப்பு அணிகளுக்கான உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஸ்லோவேனியாவை 5-0 என்ற கணக்கில் அசத்தலாக வென்று, தோல்வியின்றி அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com