கைவிடப்பட்டது நியூஸி. - ஆப்கன் ஆட்டம்
By DIN | Published On : 27th October 2022 05:19 AM | Last Updated : 27th October 2022 05:19 AM | அ+அ அ- |

டி20 உலகக் கோப்பையில் புதன்கிழமை நடைபெற இருந்த நியூஸிலாந்து - ஆப்கானிஸ்தான் ஆட்டமும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
இந்த ஆட்டமும், மழையால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து - அயா்லாந்து ஆட்டம் நடைபெற்ற அதே மெல்போா்ன் மைதானத்தில் விளையாடப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வீசுவதற்கு முன்பாகவே மழை தொடங்கிய நிலையில், குறிப்பிட்ட நேரம் வரை போட்டி நடுவா்கள் காத்திருந்தனா். ஆனால், மழைப் பொழிவு தொடா்ந்து நீடித்ததை அடுத்து ஆட்டம் கைவிடுவதாக அறிவிக்கப்பட்டது. நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.