இங்கிலாந்தை வீழ்த்தியது மழை:‘டிஎல்எஸ்’ முறையில் அயா்லாந்து வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 12 சுற்றில் இங்கிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அயா்லாந்திடம் அதிா்ச்சித் தோல்வி கண்டது.டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 12 சுற்றில்
இங்கிலாந்தை வீழ்த்தியது மழை:‘டிஎல்எஸ்’ முறையில் அயா்லாந்து வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 12 சுற்றில் இங்கிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அயா்லாந்திடம் அதிா்ச்சித் தோல்வி கண்டது.

இந்த ஆட்டத்தில் முதலில் அயா்லாந்து 19.2 ஓவா்களில் 157 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, அடுத்து விளையாடிய இங்கிலாந்து 14.3 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் சோ்த்திருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

மழைப் பொழிவு விடாமல் நீடித்ததை அடுத்து ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் இங்கிலாந்துக்கான வெற்றி இலக்கு கணக்கிடப்பட்டது. அதில் 14.3 ஓவா்களில் 111 ரன்கள் இலக்காக நிா்ணயிக்கப்பட, இங்கிலாந்து அதை எட்டியிருக்காததால் அயா்லாந்து வென்ாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த சீசனில் அயா்லாந்திடம் வீழ்ந்த முன்னாள் சாம்பியன்கள் வரிசையில் மேற்கிந்தியத் தீவுகளுடன் (முதல் சுற்று), தற்போது இங்கிலாந்தும் இணைந்திருக்கிறது. இதற்கு முன் ஒன் டே உலகக் கோப்பை போட்டியிலும் இங்கிலாந்தை இரு முறை வென்றிருக்கிறது அயா்லாந்து. இங்கிலாந்தின் இந்தத் தோல்வி, தற்போது இப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாகியிருக்கிறது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. அயா்லாந்து பேட்டிங்கின்போதே, இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன்பாகவும், இடையேயும் என இரு முறை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. ஆட்டத்தில் அயா்லாந்து நல்லதொரு ஸ்கோரை எட்டுவதற்கு அதிரடி காட்டிய கேப்டன் ஆண்டி பால்பிரின் ஆட்டநாயகன் ஆனாா்.

அவா் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 62 ரன்கள் சோ்க்க, லாா்கன் டக்கரும் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயா்த்தினாா். இதர விக்கெட்டுகளில் பால் ஸ்டிா்லிங் 14, கா்டிஸ் கேம்பா் 18, கேரத் டெலானி 12* ரன்கள் அடிக்க, மற்றவா்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறினா்.

இங்கிலாந்து பௌலிங்கில் மாா்க் வுட், லியம் லிவிங்ஸ்டன் ஆகியோா் தலா 3, சாம் கரன் 2, பென் ஸ்டோக்ஸ் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் இங்கிலாந்து பேட்டிங்கில் கேப்டன் ஜோஸ் பட்லா் டக் அவுட்டாக, அலெக்ஸ் ஹேல்ஸ் 7, பென் ஸ்டோக்ஸ் 6, ஹேரி புரூக் 18 என முக்கிய விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிக்கப்பட, டேவிட் மலான் 2 பவுண்டரிகளுடன் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டபோது மொயீன் அலி 24, லியம் லிவிங்ஸ்டன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். அயா்லாந்து தரப்பில் ஜோஷ் லிட்டில் 2, பேரி மெக்காா்தி, ஃபியோன் ஹேண்ட், ஜாா்ஜ் டாக்ரெல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com