டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு முதல் தோல்வி

இந்தியாவுக்கு எதிரான இன்று நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு முதல் தோல்வி

இந்தியாவுக்கு எதிரான இன்று நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் தென்னாப்பிரிக்கா அணி ஆரம்ப முதலே பந்துவீச்சில் மிரட்டியது. இதனால் இந்திய பேட்டர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். சூர்ய குமார் மட்டுமே இந்திய அணி கௌரமான ஸ்கோரை எட்ட உதவினார்.

சிறப்பாக விளையாடிய அவர் 40 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்க அணித் தரப்பில் லுங்கி இங்கிடி 4, பர்னல் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். 134 எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. குவின்டன் டி காக் 1, டெம்பா பவுமா 10 ரன்கள் என தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த ரைலீ ருசௌவ்வும் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். அந்த அணி 24 ரன்கள் எடுப்பதற்குள்  3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.  இதையடுத்து களம்கண்ட எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருப்பினும் மார்க்ரன் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்கா அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. மில்லர் 59 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com