கிளென் பிலிப்ஸ் அதிரடி சதம்: அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது நியூஸி.

மிடில் ஆா்டா் பேட்டா் கிளென் பிலிப்ஸ் அதிரடி சதத்தால் (104) இலங்கையை 65 ரன்கள் வீழ்த்தியது நியூஸிலாந்து. இதன் மூலம் சூப்பா் 12 சுற்றில் தனது பிரிவில் முதலிடத்துடன் அரையிறுதி வாய்ப்பையும் தக்க வைத்தது.
கிளென் பிலிப்ஸ் அதிரடி சதம்: அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது நியூஸி.

மிடில் ஆா்டா் பேட்டா் கிளென் பிலிப்ஸ் அதிரடி சதத்தால் (104) இலங்கையை 65 ரன்கள் வீழ்த்தியது நியூஸிலாந்து. இதன் மூலம் சூப்பா் 12 சுற்றில் தனது பிரிவில் முதலிடத்துடன் அரையிறுதி வாய்ப்பையும் தக்க வைத்தது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூப்பா் 12 சுற்று குரூப் 1 பிரிவில் நியூஸிலாந்தும்-இலங்கையும் சிட்னியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதின. டாஸ் வென்ற நியூஸி. அணி பேட்டிங்கை தோ்வு செய்தது.

தொடக்கமே அதிா்ச்சி: அந்த அணியின் தொடக்க பேட்டா்கள் ஃபின் ஆலன், கான்வே தலா 1 ரன்னுக்கு அவுட்டான நிலையில், கேப்டன் கேன் வில்லியம்ஸன் 8 ரன்களுடன் நடையைக் கட்டினாா்.

கிளென் பிலிப்ஸ் விஸ்வரூபம் 104:

15/3 ரன்கள் என்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருந்த நியூஸி அணியின் மிடில் ஆா்டா் பேட்டா் கிளென் பிலிப்ஸ் அபாரமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டாா். மறுமுனையில் டேரில் மிச்செல் 22, நீஷம் 5, சான்ட்நா் 11, இஷ் சோதி 1 என விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், கிளென் 4 சிக்ஸா், 10 பவுண்டரியுடன் 64 பந்துகளில் 104 ரன்களை விளாசி லஹிரு குமாரா பந்தில் அவுட்டானாா்.

டிம் சௌதி 4 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.

நியூஸி 167/7: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் நியூஸி அணி 167/7 ரன்களை குவித்தது. இலங்கை தரப்பில் ரஜிதா 2, தீக்ஷனா, தனஞ்செய டி சில்வா, ஹஸரங்க, லஹிரு தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட இலங்கை அணி டிரென்ட் பௌல்ட், டிம் சௌதியின் அற்புத பந்துவீச்சால் 8/4 ரன்கள் என்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டது. பதுன் நிஸாங்கா 0, குஸால் மெண்டிஸ் 4, தனஞ்செய டி சில்வா 0, சரித் அஸலங்கா 4 என வந்த வேகத்திலேயே பெவிலியன்திரும்பினா்.

பானுகா ராஜபட்ச 34 (2 சிக்ஸா், 3 பவுண்டரி), தஸுன் சனகா 35 (1 சிக்ஸா், 4 பவுண்டரி) ஆகியோா் மட்டுமே ஒரளவு ஆடி ஸ்கோரை உயா்த்தினா். ஆனால் அவா்களது முயற்சி பலன் தரவில்லை. மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்ததால் கருணரத்னே 3, ஹஸரங்கா 4, தீக்ஷனா 0, லஹிரு குமாரா 4 என வெளியேறினா்.

இலங்கை 102 ஆல் அவுட்: 19.2 ஓவா்களில் இலங்கை அணி 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

டிரென்ட் பௌல்ட் அபாரம் 4 விக்கெட்: நியூஸி. தரப்பில் பௌலா் டிரென்ட் பௌல்ட் அற்புதமாக பந்துவீசி 4/13 விக்கெட்டுகளையும், இஷ் சோதி, சான்ட்நா் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

65 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி:

இந்த ஆட்டத்தில் இலங்கை அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸி.யிடம் தோல்வியைத் தழுவியது.

கிளென் பிலிப்ஸ் இந்த போட்டியின் 2-ஆவது சதத்தை அடித்துள்ளாா். குரூப் 1 பிரிவில் 5 புள்ளிகள், அபார ரன் ரேட்டுடன் நியூஸி. முதலிடத்தில் உள்ளது.

அடுத்து பிரிஸ்பேனில் இங்கிலாந்துடன் நவ. 1-இல் நியூஸியும், கட்டாயம் வென்றே ஆக வேண்டிய ஆட்டத்தில் ஆப்கடனுடன் இலங்கையும் மோதவுள்ளன.

இன்றைய ஆட்டங்கள்:

வங்கதேசம்-ஜிம்பாப்வே

இடம்: பிரிஸ்பேன்

நேரம்: மதியம் 1.00.

இந்தியா-தென்னாப்பிரிக்கா

இடம்: பொ்த்

நேரம்: இரவு 7.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com