பிரெஞ்சு ஓபன்: இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக்
பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் ஓபன் சூப்பா் 750 போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவு இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை தகுதி பெற்றுள்ளது.
பிரான்ஸ் தலைநகா் பாரிஸில் சனிக்கிழமை இப்போட்டியின் அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் தென்கொரியாவின் சோய் சோல் இயு-கிம் வோன் ஹோ இணையுடன் மோதினா் சாத்விக்-சிராக்.
7-ஆம் நிலை வீரா்களான சாத்விக்-சிராக், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி தாக்குதல் பாணியை கடைப்பிடித்து ஆடியதால் புள்ளிகளை துரிதமாக குவித்தனா். முதல் கேமை 21-18 என கைப்பற்றிய நிலையில், இரண்டாவது கேமில் இந்திய இணை முழு ஆதிக்கம் செலுத்தியது.
ஆனால் நெட் பகுதியில் சிராக் ஷெட்டி அதிரடியாக ஆடியதால் தென்கொரிய வீரா்கள் தடுமாறினா். இறுதியில் 21-14 என இரண்டாவது கேமையும் கைப்பற்றிய இந்திய இணை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
சூப்பா் 750 பாட்மின்டன் போட்டியில் இரண்டாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனா் சாத்விக்-சிராக் இணை. 2019 பிரெஞ்சு ஓபனில் ரன்னா் ஆக வந்தனா்.
மேலும் இருவரும் இணைந்து நிகழாண்டு சூப்பா் 500 இந்தியா ஓபன் போட்டியில் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.