இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா

டி20 உலகக் கோப்பை போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 30-ஆவது ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம்  வெற்றியை இழந்தது. 
இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா

டி20 உலகக் கோப்பை போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 30-ஆவது ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம்  வெற்றியை இழந்தது. 

இப்போட்டியில் இந்தியாவுக்கு இது முதல் தோல்வியாகும். மறுபுறம் தென்னாப்பிரிக்கா, குரூப் "2'-இல் முதலிடத்துக்கு முன்னேறியது. 
இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களையே எட்டியது. அடுத்து தென்னாப்பிரிக்கா 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் சேர்த்து வென்றது. தென்னாப்பிரிக்க பெüலர் லுன்கி இங்கிடி ஆட்டநாயகன் ஆனார். 

பந்து நன்றாக பெüன்ஸ் ஆன இந்த ஆடுகளத்தில் இந்தியா பேட்டிங்கில் தடுமாற்றம் காட்ட, சூர்யகுமார் யாதவ் மட்டும் அட்டகாசமாக ஆடினார். பின்னர் இந்திய பெüலிங்கின்போதும் பெüன்ஸ் இருந்தாலும், முக்கியமான தருணங்களில் 3 ரன் அவுட்களையும், 2 கேட்ச்களையும் தவறவிட்டு ஃபீல்டிங்கில் மோசமாகச் செயல்பட்டதற்கு வெற்றியை விலை கொடுத்தது இந்திய அணி. 
இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் மாற்றம் செய்திருந்த இந்தியா, அக்ஸர் படேலுக்குப் பதிலாக தீபக் ஹூடாவை பிளேயிங் லெவனில் சேர்த்திருந்தது. 

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியின் இன்னிங்ஸில் அதிகபட்சமாக சூர்யகுமார் 40 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் விளாசினார். விராட் கோலி (12), ரோஹித் சர்மா (15) சொற்ப ரன்களில் வெளியேற, இதர விக்கெட்டுகள் வந்த வேகத்திலேயே தென்னாப்பிரிக்க பெüன்ஸர்களுக்கு பலியாகின. 

ஓவர்கள் முடிவில் புவனேஷ்வர் குமார் 4, அர்ஷ்தீப் சிங் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென்னாப்பிரிக்க பெüலிங்கில் லுன்கி இங்கிடி 4, வெய்ன் பார்னெல் 3, அன்ரிங் நோர்கியா 1 விக்கெட் கைப்பற்றினர். 
பின்னர் தென்னாப்பிரிக்க பேட்டிங்கின்போது 2-ஆவது ஓவரிலேயே குவின்டன் டி காக் (1), ரைலீ ருசெüவ் (0) ஆகிய முக்கிய விக்கெட்டுகளை ஒரு பந்து இடைவெளியில் சரித்து அசத்தினார் அர்ஷ்தீப் சிங். கேப்டன் டெம்பா பவுமாவும் 10 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டார். 

ஆனால், 4-ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த எய்டன் மார்க்ரம் - டேவிட் மில்லர் கூட்டணி 76 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அடித்தள
மிட்டது. 
இதில் மார்க்ரம் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 52 ரன்களுக்கு வெளியேற, கடைசி விக்கெட்டாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 
இறுதியில் மில்லர் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 59, வெய்ன் பார்னெல் 2 ரன்களுடன் அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பெüலிங்கில் முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் 1 விக்கெட் எடுத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com