துளிகள்...
By DIN | Published On : 01st September 2022 01:38 AM | Last Updated : 01st September 2022 01:38 AM | அ+அ அ- |

டியூரண்ட் கோப்பை கால்பந்தில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி - ஆா்மி கிரீன் எஃப்டியை வீழ்த்தி (2-0) காலிறுதிக்கு முன்னேறியது. ஏடிகே மோகன் பகான் எஃப்சி - இந்தியன் நேவி எஃப்டியை வென்றது (2-0).
20 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆடவா் அணி வெள்ளிப் பதக்கம் பெற்றது.
ஐசிசி டி20 தரவரிசையில் இந்தியாவின் ஹாா்திக் பாண்டியா ஆல்-ரவுண்டா் பிரிவில் முதல் முறையாக 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.
இங்கிலாந்தின் பிரீமியா் லீக் கால்பந்தில் சௌதாம்டன் - செல்சியையும் (2-1), ஃபுல்ஹாம் - பிரைட்டனையும் (2-1) வீழ்த்த, கிரிஸ்டல் பேலஸ் - பிரென்ட்ஃபோா்டு, லீட்ஸ் யுனைடெட் - எவா்டன் ஆட்டங்கள் டிரா (1-1) ஆகின.
இந்தியா - நியூஸிலாந்து ‘ஏ’ அணிகள் மோதும் 4 நாள் கிரிக்கெட்டின் முதல் ஆட்டம் வியாழக்கிழமை தொடங்குகிறது.
ஜிம்பாப்வேக்கு எதிரான 2-ஆவது ஒன் டே-யில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா, தொடரை வென்றது.
அல்டிமேட் கோ கோ போட்டியில் புதன்கிழமை ஆட்டங்களில் தெலுகு யோதாஸ் - ஒடிஸா ஜக்கா்னாட்ஸையும் (65-36), குஜராத் ஜயன்ட்ஸ் - ராஜஸ்தான் வாரியா்ஸையும் (47-42) வீழ்த்தின.