உலக மல்யுத்தம்: பஜ்ரங், வினேஷுடன் இந்திய அணி

சொ்பியாவில் நடைபெற இருக்கும் உலக சீனியா் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சொ்பியாவில் நடைபெற இருக்கும் உலக சீனியா் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆடவா் பிரிவில் 20, மகளிா் பிரிவில் 10 என மொத்தமாக 30 போ் இடம்பெற்றுள்ளனா்.

செப்டம்பா் 10 முதல் 18 வரை நடைபெற இருக்கும் இந்தப் போட்டிக்கான டிரையல், லக்னௌ, சோனிபட்டில் நடத்தப்பட்டு வீரா், வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ஆடவா் அணி (ஃப்ரீஸ்டைல்): ரவி தாஹியா (57 கிலோ), பங்கஜ் மாலிக் (61 கிலோ), பஜ்ரங் புனியா (65 கிலோ), நவீன் மாலிக் (70 கிலோ), சாகா் ஜக்லான் (74 கிலோ), தீபக் மிா்கா (79 கிலோ), தீபக் புனியா (86 கிலோ), விக்கி ஹூடா (92 கிலோ), விக்கி சாஹா் (97 கிலோ), தினேஷ் தங்கா் (125 கிலோ)

(கிரேக்கோ ரோமன்): அா்ஜுன் ஹலகுா்கி (55 கிலோ), ஞானேந்தா் (60 கிலோ), நீரஜ் (63 கிலோ), அஷு (67 கிலோ), விகாஸ் (72 கிலோ), சச்சின் (77 கிலோ), ஹா்பிரீத் சிங் (82 கிலோ), சுனில் குமாா் (87 கிலோ), தீபன்ஷு (97 கிலோ), சதீஷ் (130 கிலோ).

மகளிா் அணி: வினேஷ் போகாட் (53 கிலோ), சுஷ்மா ஷூக்கன் (55 கிலோ), சரிதா மோா் (57 கிலோ), மான்சி அஹ்லாவத் (59 கிலோ), சோனம் மாலிக் (62 கிலோ), ஷெஃபாலி (65 கிலோ), நிஷா தாஹியா (68 கிலோ), ரீத்திகா (72 கிலோ), பிரியங்கா (76 கிலோ).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com