ஜப்பான் ஓபன்: ஸ்ரீகாந்த் வெற்றி; லக்ஷயா தோல்வி

ஜப்பானில் நடைபெறும் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் கே.ஸ்ரீகாந்த் அசத்தலான வெற்றியுடன் 3-ஆவது சுற்றுக்கு முன்னேற, லக்ஷயா சென் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.
ஜப்பான் ஓபன்: ஸ்ரீகாந்த் வெற்றி; லக்ஷயா தோல்வி

ஜப்பானில் நடைபெறும் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் கே.ஸ்ரீகாந்த் அசத்தலான வெற்றியுடன் 3-ஆவது சுற்றுக்கு முன்னேற, லக்ஷயா சென் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

ஆடவா் ஒற்றையரில் ஸ்ரீகாந்த் 22-20, 23-21 என்ற கேம்களில் உலகின் 4-ஆம் நிலை வீரரான மலேசியாவின் லீ ஜி ஜியாவை 37 நிமிஷங்களிலேயே வீழ்த்தினாா். இத்துடன் ஜியாவை 4-ஆவது முறையாக சந்தித்த ஸ்ரீகாந்த்துக்கு, இது முதல் வெற்றியாகும்.

எனினும், உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற லக்ஷயா சென் 21-18, 14-21, 13-21 என்ற கேம்களில், உலகின் 21-ஆம் நிலை வீரரான ஜப்பானின் கென்டா நிஷிமோடோவிடம் தோல்வி கண்டாா்.

மறுபுறம், மகளிா் ஒற்றையரில் சாய்னா நெவால் 9-21, 17-21 என, போட்டித்தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் ஜப்பானின் அகேன் யமகுச்சியிடம் 30 நிமிஷங்களில் வெற்றியை இழந்தாா்.

ஆடவா் இரட்டையரில் எம்.ஆா்.அா்ஜுன்/துருவ் கபிலா கூட்டணி 21-19, 21-23, 15-21 என தென் கொரியாவின் சோய் சோல் கியு/கிம் வோன் ஹோ இணையிடம் தோற்றது. அதேபோல், கிருஷ்ண பிரசாத்/விஷ்ணுவா்தன் கௌட் இணை 18-21, 17-21 என பிராஸின் கிரிஸ்டோ போபோவ்/டோமா ஜூனியா் போபோவ் கூட்டணியிடம் வீழ்ந்தது.

மகளிா் இரட்டையா் பிரிவில் காயத்ரி கோபிசந்த்/டிரீசா ஜாலி இணை 17-21, 18-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த தாய்லாந்தின் ஜோங்கோல்பான் கிட்டிதரகுல்/ரவிண்டா பிரஜோங்ஜாய் கூட்டணியால் வீழ்த்தப்பட்டது .

கலப்பு இரட்டையரில் ஜுஹி தேவாங்கன்/வெங்கட் கௌரவ் பிரசாத் 11-21, 10-21 என சீனாவின் ஜெங் சி வெய்/ஹுவாங் யா கியாங்கிடம் வெற்றியை இழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com