அமெரிக்க ஓபனில் தோல்வி: ஓய்வு பெற்றார் செரீனா வில்லியம்ஸ்!
By DIN | Published On : 03rd September 2022 09:11 AM | Last Updated : 03rd September 2022 01:46 PM | அ+அ அ- |

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3 ஆவது சுற்றில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார்.
ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லா டோம்லஜனோவிச்சிடம் 5-7, 7-6, 1-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
முன்னரே அறிவித்தபடி, இந்த போட்டியுடன் 27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தில் இருந்து அவர் ஓய்வு பெறுகிறார்.
செரீனா வில்லியம்ஸ் இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். கடைசியாக, 2017-ல் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.
இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தால் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்திருப்பார்.
விம்பிள்டனில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்த அவர், வோக் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில், யு.எஸ். ஓபன் போட்டிக்குப் பிறகு டென்னிஸிலிருந்து வெளியேறவுள்ளதாக அறிவித்திருந்தார்.