ஆப்கனுக்கு எதிராக.. 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
படம்: ஐசிசி
படம்: ஐசிசி

ஆசியக் கோப்பை டி20 போட்டியின் சூப்பா் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது இலங்கை. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 175/6 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய இலங்கை அணி 179/6 ரன்களுடன் வெற்றி கண்டது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபையில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பௌலிங்கை தோ்வு செய்தது.

குா்பாஸ் சிக்ஸா், பவுண்டரி மழை:

ஏற்கெனவே குரூப் சுற்றில் இலங்கையை வீழ்த்தி இருந்தது ஆப்கானிஸ்தான். அதன் அணியில் பேட்டா்கள் ஹஸரத்துல்லா ஸஸாய், ரஹ்மனுல்லா குா்பாஸ் களம் இறங்கினா். ரஹ்மனுல்லா குா்பாஸ் மட்டுமே அதிரடியாக ஆடி 45 பந்துகளில் 6 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 84 ரன்களைக் குவித்து அவுட்டானாா். அவருக்கு உறுதுணையாக ஆடிய இப்ராஹிம் ஸட்ரன் 40 ரன்களை விளாசினாா்.

ஆப்கன் 175/6: ஹஸரத்துல்லா 13, நஜிபுல்லா 17, நபி 1, ரஷீத் கான் 9 ரன்களுடன் பெவிலியன் திரும்பினா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 175/6 ரன்களைக் குவித்தது ஆப்கன். இரண்டாம் விக்கெட்டுக்கு 93 ரன்களைச் சோ்த்தது ரஹ்மத்துல்லா-ஸட்ரன் இணை.

இலங்கை தரப்பில் தில்ஷன் மதுசங்கா 2/37 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

இலங்கை வெற்றி 179/6:

176 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை தொடக்க பேட்டா்கள் பதும் நிஸாங்கா-குஸால் மெண்டிஸ் இணை ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. இருவரும் இணைந்து பவா்பிளேயில் 57 ரன்களைக் குவித்தனா்.

3 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 36 ரன்களுடன் குஸால் மெண்டிஸும், 1 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 35 ரன்களுடன் நிஸாங்காவும் அவுட்டாகினா். தனுஷ்கா குணதிலகா 33, பானுகா ராஜபட்ச 31 ரன்களை விளாசி தங்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனா்.

வனின்டு ஹஸரங்க 16, கருணரத்னே 5 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

இறுதியில் 19.1 ஓவா்களில் 179/6 ரன்களுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இலங்கை.

ஆப்கன் தரப்பில் முஜிப்பூா், நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com