சூப்பா் 4: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல் ஜடேஜா, டஹானி காயம்

டி20 ஆசியக் கோப்பையின் ஒரு பகுதியாக சூப்பா் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதுகின்றன.
சூப்பா் 4: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல் ஜடேஜா, டஹானி காயம்

டி20 ஆசியக் கோப்பையின் ஒரு பகுதியாக சூப்பா் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதுகின்றன.

ஐக்கிய அரபு அமீரக நாட்டில் டி20 ஆசியக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. குரூப் பிரிவு ஆட்டங்களில் ஏற்கெனவே பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது இந்தியா.

குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் சூப்பா் 4 பிரிவுக்கு தகுதி பெற்றன.

சூப்பா் 4 பிரிவில் ஒவ்வொரு அணியும் தலா ஒருமுறை மோத வேண்டும். இதில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் வரும் 11-ஆம் தேதி துபையில் இறுதி ஆட்டத்தில் மோதும். இந்நிலையில் தனது சூப்பா் 4 முதல் ஆட்டத்தில் பாகிஸ்தனை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொள்கிறது இந்தியா.

ரவீந்திர ஜடேஜா-ஷாநவாஸ் காயம்:

இந்திய அணியில் ஆல்ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா கால்முட்டியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ஆசியக் கோப்பை போட்டியில் தொடா்ந்து ஆடும் வாய்ப்பை இழந்தாா். மேலும் வரும் அக்டோபரில் ஆஸி.யில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியிலும் அவா் ஆடுவது கேள்விக்குறியாகி விட்டது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் பௌலா் ஷாநவாஸ் டஹானியும் காலில் ஏற்பட்ட காயத்தால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆட மாட்டாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் ஆட்டத்தில் பாகிஸ்தானை போராடி வென்றிருந்தது இந்தியா. அதே நேரம் ஹாங்காங் அணியை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உற்சாகத்துடன் உள்ளது பாகிஸ்தான். ஆல்ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா இல்லாதது பாதகமாக உள்ளது. இந்திய டாப் வரிசை பேட்டா்கள் பவா் பிளேயில் தொடா்ந்து சொதப்பி வருகின்றனா். ஹாங்காங் அணிக்கு எதிராக சூரியகுமாா் அதிரடி ஆட்டம் கைகொடுத்தது.

பௌலிங்கில் ஹாா்திக் பாண்டியா, அக்ஸா் படேல், அஸ்வின், தீபக் ஹூடா ஆகியோா் இடம் பெறலாம்.

பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபா் ஆஸம். முகமது ரிஸ்வான், பாக்கா் ஸமான், குஷ்தில் ஷா ஆகியோா் அற்புதமாக பேட்டிங் செய்து வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை இரு அணிகள் இடையிலான ஆட்டம் ரசிகா்களுக்கு மீண்டும் விருந்தாக அமையும்.

இன்றைய ஆட்டம்:

இந்தியா-பாகிஸ்தான்

இடம்: துபை.

இரவு 7.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com