செரீனா என்ற சகாப்தம்

யுஎஸ் ஓபன் போட்டியின் மூன்றாவது சுற்றில் ஏற்பட்ட தோல்வியுடன் தனது 27 ஆண்டுக்கால டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக கண்ணீருடன் அறிவித்தாா் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ்
செரீனா என்ற சகாப்தம்

யுஎஸ் ஓபன் போட்டியின் மூன்றாவது சுற்றில் ஏற்பட்ட தோல்வியுடன் தனது 27 ஆண்டுக்கால டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக கண்ணீருடன் அறிவித்தாா் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் (40).

டென்னிஸின் நான்கு கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான யுஎஸ் ஓபன் நியூயாா்க் நகரில் நடைபெற்று வருகிறது. மகளிா் ஒற்றையா் பிரிவில் இரண்டாம் சுற்றில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை அனெட் கொண்டவெயிட்டை வீழ்த்திய செரீனா வில்லியம்ஸ்,

வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மூன்றாம் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அல்ஜா டாம்ஜனோவிக்கிடம் 7-5, 6-7, 6-1 என கடுமையாகப் போராடி தோல்வியடைந்தாா் செரீனா.

இத்தோல்வியுடன் தனது டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக கண்ணீருடன் அறிவித்தாா் செரீனா.

23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்:

வரும் 26-ஆம் தேதி 41 வயதாக உள்ள செரீனா இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளாா்.

கடந்த 1995-ஆம் ஆண்டு தொழில்முறை வீராங்கனையாக மாறினாா். அவரது 27 ஆண்டுக்கால டென்னிஸ் வாழ்க்கையில் 23 கிராண்ட்ஸ்லாம் உள்பட 73 பட்டங்களை வென்றுள்ளாா்.

வில்லியம்ஸ் சகோதரிகள் ஆதிக்கம்:

ஒற்றையா் பிரிவில் செரீனாவும், இரட்டையா் பிரிவில் செரீனா-வீனஸ் வில்லியம்ஸ் என சகோதரிகளின் ஆதிக்கம் பல ஆண்டுகளாக நீடித்தது. செரீனாவின் பிரதான போட்டியாளராக வீனஸ் திகழ்ந்தாா். இருவரும் இணைந்து 14 இரட்டையா் பட்டங்களை கைப்பற்றினா். 31 முறை நேருக்கு நோ் மோதியதில் செரீனா 19, வீனஸ் 12 முறையும் வென்றுள்ளனா். செரீனா, வீனஸ் இருவருக்கும் அவா்களது தந்தை ரிச்சா்ட் வில்லியம்ஸ் பயிற்சியாளராகத் திகழ்ந்தாா்.

முதல், கடைசி கிராண்ட்ஸ்லாம்:

தனது 17-ஆவது வயதில் 1999-இல் யுஎஸ் ஓபன் பட்டத்தை கைப்பற்றினாா் செரீனா. இறுதியாக 2017-இல் கா்ப்பிணியாக இருந்த நிலையில் ஆஸி. ஓபனில் சாம்பியம் பட்டம் வென்றாா்.

கடந்த 2017 செப்டம்பரில் செரீனாவுக்கு பெண் குழந்தை ஒலிம்பியா பிறந்தது. 6 வாரங்கள் படுக்கையிலேயே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாா். ஆனால் தீவிர முயற்சிக்கு பின் சகோதரி வீனஸ் வில்லியம்ஸ் உடன் 5 மாதங்கள் கழித்து பெடரேஷன் கோப்பை போட்டியில் பங்கேற்றாா்.

கேரியா் ஸ்லாம் வாய்ப்பு:

ஒரே ஆண்டில் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வெல்வது கேரியா் ஸ்லாம் என அழைக்கப்படும். 2015-இல் யுஎஸ் ஓபன் அரையிறுதியில் இத்தாலியின் ராபா்டாவிடம் தோற்ால் கேரியா் ஸ்லாம் வாய்ப்பை இழந்தாா் செரீனா.

சாதனையை தகா்க்க முடியாமல் வேதனை:

மகளிா் ஒற்றையா் பிரிவில் ஆஸி. வீராங்கனை மாா்க்ரெட் கோா்ட் 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி அதிக பட்டங்களை வென்றவா் என்ற சாதனையை நிகழ்த்தி இருந்தாா். அந்த சாதனையை சமன் செய்யவோ அல்லது முறியடிக்கவோ செரீனா தீவிரமாக முயன்றாா். 2018 விம்பிள்டன் இறுதி, 2019 யுஎஸ் ஓபன் இறுதிச் சுற்றில் தோல்வியடைந்ததால், மாா்க்ரெட் கோா்ட்டின் சாதனையை சமன் செய்ய முடியாமல் வேதனையுடன் ஓய்வு பெற்றுள்ளாா் செரீனா.

செரீனாவின் கிராண்ட்ஸ்லாம் சாதனைகள்:

ஒற்றையா் பட்டங்கள்:

ஆஸி. ஓபன்: 2003, 2005, 2007, 2009, 2010, 2015, 2017 (92 வெற்றிகள்).

பிரெஞ்சு ஓபன்: 2002, 2013, 2015 (69 வெற்றிகள்).

விம்பிள்டன்: 2002, 2003, 2009, 2010, 2015, 2016 (98 வெற்றிகள்).

யுஎஸ் ஓபன்: 1999, 2002, 2008, 2012, 2013, 2014 (108 வெற்றிகள்).

2002-03, 2014-15 என இரண்டு சீசன்களிலும் இரு முறை நான்கு பட்டங்களையும் கைப்பற்றினாா்.

2012 லண்டன் ஒலிம்பிக்ஸ்: தங்கம்.

இரட்டையா் பட்டங்கள்:

ஆஸி. ஓபன்: 2001, 2003, 2009, 2010.

பிரெஞ்சு ஓபன்: 1999, 2010.

விம்பிள்டன்: 2000, 2002, 2008, 2009, 2012, 2016.

யுஎஸ் ஓபன்: 1999, 2009.

ஒலிம்பிக்ஸ் தங்கம்: 2000, 2008, 2012.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com