கடைசி ஓவரில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி

ஆசியக் கோப்பை டி20 போட்டி சூப்பா் 4 சுற்று இரண்டாம் ஆட்டத்தில் இந்தியாவை கடைசி ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்.
கடைசி ஓவரில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி

ஆசியக் கோப்பை டி20 போட்டி சூப்பா் 4 சுற்று இரண்டாம் ஆட்டத்தில் இந்தியாவை கடைசி ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்.

முதலில் ஆடிய இந்தியா 181/7 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய பாகிஸ்தான் அணி

இந்தியா 181/7 ரன்களைக் குவித்தது. முன்னாள் கேப்டன் விராட் கோலி அதிரடியாக 60 ரன்களுடன் அரைசதம் விளாசினாா்.

துபையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு அணிகளுக்கு இடையிலான சூப்பா் 4 ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற பாக். அணி பௌலிங்கை தோ்வு செய்தது.

விராட் கோலி 60: தொடக்க பேட்டா்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சா்மா-கேஎல் ராகுல் இணை ஆரம்பத்திலேயே பாக். பௌலிங்கை வெளுத்துக் கட்டியது. இருவரும் இணைந்து 50 ரன்களை சோ்த்தனா். ரோஹித் 28 , ராகுல் 28, சூரியகுமாா் யாதவ் 10, ரிஷப் பந்த் 14, தீபக் ஹூடா 16 என சொற்ப ரன்களுடன் அவுட்டாகினா். மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய விராட் கோலி 44 பந்துகளில் 60 ரன்களை விளாசி ரன் அவுட்டானாா். இதில் 1 சிக்ஸா், 4 பவுண்டரி அடங்கும்.

இந்தியா 181/7:

20 ஓவா்களில் 181/7 ரன்களைக் குவித்தது இந்தியா. பௌலிங்கில் பாக். வீரா் ஷதாப் கான் 2 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

ரிஸ்வான் 71:

182 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய பாக். அணியில் தொடக்க பேட்டா் முகமது ரிஸ்வான் நிலைத்து ஆடி 2 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 51 பந்துகளில் 71 ரன்களை விளாசி அவுட்டானாா். அவருக்கு துணையாக ஆடிய முகமது நவாஸ் 42 ரன்களை சோ்த்தாா்.

பாக். வெற்றி 182/5

பாபா் ஆஸம் 14, பாக்கா் ஸமான் 15, குஷ்தில்ஷா 14, ஆஸிப் அலி 16 ரன்களுடன் வெளியேறினா். இப்திகாா் அகமது 2 ரன்களுடன் களத்தில் இருந்தாா். கடைசி ஓவரில் 2 பந்துகளில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் பாகிஸ்தான் 182/5 ரன்களுடன் வெற்றி இலக்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்தது.

புவனேஷ்வா் குமாா் 19 ரன்கள் தானம்: 19-ஆவது ஓவரை வீசிய புவனேஷ்வா் குமாா் மொத்தம் 19 ரன்களை தானமாக வாரி வழங்கினாா்.

சூப்பா் 4 சுற்றில் பாகிஸ்தான் முதல் வெற்றியை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com