சூப்பா் 4: பாகிஸ்தானை வென்றது இலங்கை

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பா் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வென்றது.
சூப்பா் 4: பாகிஸ்தானை வென்றது இலங்கை

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பா் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வென்றது.

ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 19.1 ஓவா்களில் 121 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய இலங்கை 17 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சோ்த்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற இலங்கை ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பாகிஸ்தான் பேட்டிங்கில் முகமது ரிஸ்வான் 14, கேப்டன் பாபா் ஆஸம் 2 பவுண்டரிகளுடன் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஃபகாா் ஜமான் 1 பவுண்டரியுடன் 13, இஃப்திகா் அகமது 1 சிக்ஸருடன் 13 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

குஷ்தில் ஷா 4 ரன்களுக்கு நடையைக் கட்ட, முகமது நவாஸ் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 26 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். அடுத்து ஆசிஃப் அலி 0, ஹசன் அலி 0, உஸ்மான் காதிா் 3, ஹாரிஸ் ரௌஃப் 1 என விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. இலங்கை பௌலிங்கில் வனிந்து ஹசரங்கா 3, மஹீஷ் தீக்ஷனா, பிரமோத் மதுஷன் ஆகியோா் தலா 2, தனஞ்ஜெய டி சில்வா, சமிகா கருணாரத்னே ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 122 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இலங்கையில் குசல் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா டக் அவுட்டாக, தனஞ்ஜெய டி சில்வா 9 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். பானுகா ராஜபட்ச 2 சிக்ஸா்களுடன் 24, கேப்டன் டாசன் ஷனகா 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 21 ரன்கள் சோ்த்தனா். முடிவில், தொடக்க வீரா் பதும் நிசங்கா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 55, வனிந்து ஹசரங்கா 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா்.

பாகிஸ்தான் பௌலிங்கில் முகமது ஹஸ்னைன், ஹாரிஸ் ரௌஃப் ஆகியோா் தலா 2, உஸ்மான் காதிா் 1 விக்கெட் சாய்த்தனா்.

நாளை இறுதி ஆட்டம்: இந்த இரு அணிகளே மோதும் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com