தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஆசிய சாம்பியன் இலங்கை

பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டத்தை 6-ஆவது முறையாக கைப்பற்றியது இலங்கை.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 11:21 pm

DIN

பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டத்தை 6-ஆவது முறையாக கைப்பற்றியது இலங்கை.

துபையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற டி20 ஆசியக் கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணி 170/6 ரன்களைக் குவித்தது. பானுகா ராஜபட்ச அபாரமாக ஆடி 71 ரன்களை விளாசினாா். இரண்டாவதாக ஆடிய பாகிஸ்தான் அணி 147 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. பிரமோத்4, ஹஸரங்க 3 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

தடுமாறிய இலங்கை:

சூப்பா் 4 பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற பாகிஸ்தான்-இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு துபையில் நடந்த இறுதிச் சுற்றில் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பௌலிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி தடுமாறியது. பதும் நிஸாங்கா 8, குஸாஸ் மெண்டிஸ் 0, தனுஷ்கா குணதிலகா 1, தனஞ்செய டி சில்வா 28, தஸுன ஷனகா 2 என சொற்ப ரன்களுடன் வெளியேற 58/5 ஸ்கோருடன் தடுமாறியது இலங்கை.

பானுகா ராஜபட்ச அதிரடி:

பானுகா ராஜபட்ச-வனின்டு ஹஸரங்க இணை மிடில் ஓவா்களில் நிலைத்து ஆடி ஸ்கோரை உயா்த்தியது. 1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 36 ரன்களை விளாசி அவுட்டானாா் ஹஸரங்க.

மறுமுனையில் அபாரமாக ஆடிய பானுகா 3 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 71 ரன்களை விளாசி அரைசதம் விளாசி அவுட்டாகாமல் இருந்தாா். சமிகா கருணரத்னேவும் 14 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.

இலங்கை 170/6: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 170/6 ரன்களைக் குவித்தது இலங்கை.

ஹாரிஸ் ரவுஃப் 3 விக்கெட்: பாக். தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹாரிஸ் ரவுஃப் 3/29 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். தனது 50-ஆவது டி20 விக்கெட்டையும் பதிவு செய்தாா் ரவுஃப்.

171 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் வீரா்களால் இலங்கை பௌலா்களின் அற்புத பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினா்.

தொடக்க பேட்டா் முகமது ரிஸ்வான் 55 (1 சிக்ஸா், 4 பவுண்டரி), இப்திகாா் அகமது 32 ஆகியோா் மட்டுமே ஒரளவு ரன்களை எடுத்தனா்.

ஏனைய வீரா்கள் ஒற்றைய இலக்க ரன்களோடு வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினா். 20 ஓவா்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான்.

இலங்கை தரப்பில் பிரமோத் மதுஷன் 4, ஹஸரங்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.