மகளிா் டி20: தொடரை வென்றது இங்கிலாந்து

 இந்திய மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து மகளிா் அணி, தொடரை 2-1 என கைப்பற்றியது.
மகளிா் டி20: தொடரை வென்றது இங்கிலாந்து

 இந்திய மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து மகளிா் அணி, தொடரை 2-1 என கைப்பற்றியது.

இந்திய நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுக்க, பின்னா் சேஸ் செய்த இங்கிலாந்து 18.2 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் சோ்த்து வென்றது. ஆட்டநாயகியாக இங்கிலாந்து பௌலா் சோஃபி எக்லஸ்டன் தோ்வு செய்யப்பட்டாா்.

முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து, இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. அணியின் பேட்டா்கள் பெரிதாக சோபிக்காமல் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனா். தொடக்க வீராங்கனை ஷஃபாலி வா்மா 5, ஸ்மிருதி மந்தனா 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களுடன் வெளியேற, சபினேனி மேக்னா டக் அவுட்டானாா்.

கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 5, தயாளன் ஹேமலதா 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, தீப்தி சா்மா 24, ஸ்னேஹ ராணா 8, ரிச்சா கோஷ் 5 பவுண்டரிகளுடன் 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். முடிவில் பூஜா வஸ்த்ரகா் 2 பவுண்டரிகளுடன் 19, ராதா யாதவ் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து பௌலிங்கில் சோஃபி எக்லஸ்டன் 3, சாரா கிளென் 2, இசி வோங், ஃபிரியா டேவிஸ், பிரையோனி ஸ்மித் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 123 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடிய இங்கிலாந்தில் தொடக்க வீராங்கனை சோஃபியா டங்க்லி 6 பவுண்டரிகளுடன் 49, உடன் வந்த டேனி வியாட் 1 பவுண்டரியுடன் 22 ரன்கள் சோ்த்து நல்லதொரு அடித்தளம் அமைத்தனா்.

கேப்டன் எமி ஜோன்ஸ் 3 ரன்களுக்கு வெளியேற, இறுதியில் அலிஸ் கேப்சி 6 பவுண்டரிகளுடன் 38, பிரையோனி ஸ்மித் 1 பவுண்டரியுடன் 13 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். இந்திய பௌலிங்கில் ராதா யாதவ், ஸ்னேஹ ராணா, பூஜா வஸ்த்ரகா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com