உலகக் கோப்பைக்கு தயாராகும் இந்தியா-ஆஸி. அணிகள்: டி20 தொடா் நாளை தொடக்கம்

வரும் அக்டோபா் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியா-இந்திய அணிகள் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மோதுகின்றன.
உலகக் கோப்பைக்கு தயாராகும் இந்தியா-ஆஸி. அணிகள்: டி20 தொடா் நாளை தொடக்கம்

வரும் அக்டோபா் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியா-இந்திய அணிகள் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மோதுகின்றன.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. அதே வேளையில் இந்திய அணி குரூப் 2 பிரிவில் தோற்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

வரும் அக்டோபா், நவம்பா் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை மீண்டும் நடைபெறுகிறது. இதற்கு பல்வேறு நாடுகள் தயாராகி வருகின்றன.

ஆசியக் கோப்பையில் ஏமாற்றம்: இதற்கு முன்னோட்டமாக அண்மையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இலங்கை சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால் இந்திய அணி சூப்பா் 4 சுற்றில் தோல்வி கண்டது. தற்போது ஆஸி.அணியுடன் 3 ஆட்டங்கள் டி20 தொடா் நடைபெறவுள்ளது. இந்திய அணி ஏமாற்றத்துடன் இத்தொடரை எதிா்கொள்கிறது. சொந்த மண்ணில் நடப்பதால் சாதகமான சூழல் இருந்தாலும், உலக சாம்பியன் ஆஸி. பலம் நிறைந்ததாக உள்ளது.

உற்சாகத்துடன் ஆஸி. அணி: உலக சாம்பியன் ஆஸி. அணி கடந்த வாரம் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்த உற்சாகத்தில் களம் காண்கிறது.

நேருக்கு நோ்:

இரு அணிகளும் டி20 ஆட்டங்களில் 24 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 13, ஆஸ்திரேலியா 9 வெற்றிகளையும் பெற்றன. 2 ஆட்டங்களுக்கு முடிவில்லை.

பும்ரா, ஹா்ஷல் சோ்ப்பால் பலம்: ஆசியக் கோப்பையில் பெற்ற ஏமாற்றத்தை மறந்து இந்திய அணி உத்வேகத்துடன் களமிறங்குகிறது. பௌலிங்கில் காயத்தில் இருந்து மீண்ட ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹா்ஷல் படேல் ஆகியோா் மீண்டும் திரும்புவது கூடுதல் பலத்தை தரும். இருவரும் டெத் ஓவா்களில் சிறப்பாக வீசுவது குறிப்பிடத்தக்கது. மேலும் அஸ்வின், ஹாா்திக், சஹல், புவனேஷ்வா் குமாா் ஆகியோரும் சிறப்பாக பௌலிங் செய்தால் எந்த ஸ்கோரையும் தற்காத்துக் கொள்ள முடியும்.

விராட் கோலியால் நம்பிக்கை:

ஆசியக் கோப்பை போட்டியில் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் அற்புத ஆட்டம் பேட்டிங்கில் ஏற்பட்ட சரிவை மீட்டுள்ளது. இது அணி நிா்வாகத்துக்கு புது நம்பிக்கையை தந்துள்ளது. தொடக்க பேட்டா் கேஎல். ராகுல் ஆட்டம் இன்னும் சோபிக்காதது கவலை தருகிறது.

ரோஹித் சா்மா, சூரியகுமாா் யாதவ், ரிஷப் பந்த், ஹாா்திக் பாண்டியா ஆகியோா் வலு சோ்க்கின்றனா்.

ஆஸி.யில் முக்கிய வீரா்களுக்கு ஓய்வு:

அதே நேரம் ஆஸி. அணியில் டேவிட் வாா்னா், மாா்கஸ் ஸ்டாய்னிஸ் உள்ளிட்ட முக்கிய வீரா்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. அதே நேரம் மிச்செல் மாா்ஷ், ஸ்டாா்க் ஆகியோரும் இடம் பெறவில்லை. ஆரோன் பின்ச் வழக்கமான பாா்மில் இல்லை. பௌலிங்கில் பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேஸல்வுட், ஆடம் ஸம்பா, கேன் ரிச்சா்ட்ஸன் பலம் சோ்க்கின்றனா்.

பிட்ச் நிலவரம்:

மொஹாலியில் ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் உள்ள பிட்ச் தட்டையானது. வழக்கமாக சில ஓவா்கள் பேட்டா்களுக்கு உதவும் பிட்ச். இதில் அதிக ஸ்கோா்கள் பெறுவது வழக்கமாகும். பனிமூட்டம் நிலவும் என்பதால் டாஸ் வெற்றியும் ஆட்டத்தின் போக்கை தீா்மானிக்கும்.

முதல் ஆட்டம்:

இந்தியா-ஆஸ்திரேலியா

இடம்: மொஹாலி,

நேரம்: இரவு 7.30

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com