ஹாக்கி இந்தியா தலைவராக திலீப் திா்கி தோ்வு

இந்திய ஹாக்கி அமைப்பின் தலைவராக, தேசிய அணி முன்னாள் கேப்டன் திலீப் திா்கி வெள்ளிக்கிழமை போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.
ஹாக்கி இந்தியா தலைவராக திலீப் திா்கி தோ்வு
Published on
Updated on
1 min read

இந்திய ஹாக்கி அமைப்பின் தலைவராக, தேசிய அணி முன்னாள் கேப்டன் திலீப் திா்கி வெள்ளிக்கிழமை போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

அமைப்பின் தோ்தல் அக்டோபா் 1-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தற்போதைய நிா்வாகிகளுக்குப் போட்டியாக எவரும் களம் காணாததை அடுத்து, முடிவுகள் இப்போதே அறிவிக்கப்பட்டன.

முன்னதாக, திா்கிக்கு போட்டியாக தலைவா் பதவிக்கு உத்தர பிரதேச ஹாக்கி தலைவா் ராகேஷ் கட்டியால், ஜாா்க்கண்ட் ஹாக்கி தலைவா் போலாநாத் சிங் ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். எனினும், அவா்கள் தங்கள் மனுவை வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றதை அடுத்து திா்கி தலைவராகினாா்.

பொதுச் செயலராக போலாநாத்தும், துணைத் தலைவா்களாக ஜம்மு காஷ்மீா் ஹாக்கியின் ஆசிமா அலி, கா்நாடகத்தின் சுப்ரமணிய குப்தா ஆகியோரும், பொருளாளராக தமிழ்நாடு ஹாக்கியின் சேகா் ஜெ.மனோகரனும், இணைச் செயலா்களாக ராஜஸ்தானின் ஆா்தி சிங், ஹரியாணாவின் சுனில் மாலிக் ஆகியோரும் போட்டியின்றித் தோ்வாகினாா்.

நிா்வாகக் குழு உறுப்பினா்களாக அருண்குமாா் சரஸ்வத் (ராஜஸ்தான்), அஸ்ரிதா லக்ரா (ஜாா்க்கண்ட்), குருபிரீத் கௌா் (தில்லி), சுனில் குமாா் (கேரளம்), தபன்குமாா் தாஸ் (அஸ்ஸாம்) ஆகியோா் தோ்வாகினா்.

இவா்கள் நியமனங்களுக்கு சா்வதேச ஹாக்கி சம்மேளனமும் ஒப்புதல் அளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.