2000% இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல்: முன்னாள் சிஎஸ்கே வீரர் கருத்து

தோனியின் ஓய்வு குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரர் கேதார் ஜாதவ் கருத்து தெரிவித்துள்ளார். 
படம் : ட்விட்டர் | கேதார் ஜாதவ்.
படம் : ட்விட்டர் | கேதார் ஜாதவ்.

2023 ஐபிஎல் போட்டியோடு தோனி ஓய்வு பெறுவார் என கேதார் ஜாதவ் கூறியுள்ளார். 41 வயதான தோனி இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் நாடு முழுவதும் இருக்கிறது. சமீபத்தில் சிஎஸ்கே அணிக்காக 200வது முறையாக கேப்டனாக விளையாடினார். மொத்தமாக ஐபிஎல்-இல் இதுவரை 238 போட்டிகள் விளையாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். 3 ரன்களில் சிஎஸ்கே தோல்வியிற்றாலும் அந்த போட்டியை ஜியோ சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ரசிகர்கள் 2.2 கோடி பேர் பார்த்து சாதனை படைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் சிஎஸ்கே வீரர் கேதார் ஜாதவ் இது குறித்து கூறியதாவது: 

நான் 2000 சதவிகிதம் நிச்சயமாக சொல்லுவேன் கிரிக்கெட் வீரராக இதுதான் தோனியின் கடைசி ஐபில் வருடமாக இருக்கும். ஜூலை மாதம் வந்தால் தோனிக்கு 42 வயது. இருந்தும் அவர் ஃபிட்னஸாக உள்ளார். இருந்தாலும் அவரும் மனிதர்தான். அதனால் இதுதான் அவரது கடைசி ஐபிஎல்-ஆக இருக்குமென நினைக்கிறேன். ரசிகர்கள் தோனியின் ஒரு போட்டியையும் விடக்கூடாது. களத்தில் தோனி இருக்கும் ஒவ்வொரு பந்தையும் ரசிகர்கள் பார்க்க வேண்டும். மேலும் ஜியோ சினிமாவில் தோனி பேட்டிங்கின்போது புதிய சாதனை படைக்கப்பட்டதும் நினைவிருக்கிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com