
2008ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக தனது முதல் போட்டியினை துவங்கினார். சமீபத்தில் ராஜஸ்தான் அணியுடனான ஐபிஎல் போட்டியின் போது தோனி தனது 200வது போட்டியில் கேப்டனாக விளையாடினார். அந்தப் போட்டியில் சிஎஸ்கே தோற்றாலும் 17 பந்துகளில் 32 ரன்கள் அடித்த தோனி சூப்பர் ஸ்டிரைக்கர் விருதினைப் பெற்றார்.
213 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். சிஎஸ்கேவுக்காக மட்டும் 200 போட்டிகளில் கேப்டன். சமீபத்தில் ஐபில் போட்டிகளில் 5000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். சிஎஸ்கே அணி அதிக முறை ப்ளே-ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.இன்று ஆர்சிபியுடன் சிஎஸ்கே மாலை 7.30 மணிக்கு விளையாட உள்ளது. இந்நிலையில், முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தோனி பற்றி கூறியதாவது:
கடினமான சூழ்நிலையில் இருந்து எப்படி வெளியே வரவேண்டும் என சிஎஸ்கேவிற்கு தெரியும். இது தோனியால் மட்டுமே முடியும். 200 போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பது மிகவும் கடினம். அதிகமான போட்டிகளில் கேப்டனாக இருப்பது ஒரு சுமை; மேலும் அது விளையாடுபவர்களின் ஆட்ட திறனை குறைக்கும். ஆனால் தோனி வித்தியாசமானவர். வித்தியாசமான கேப்டன். அவரைப் போன்ற கேப்டன் இதற்கு முன்பும் இல்லை, இனிமேலும் வரப்போவதுமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.