காலிறுதியில் ஜானிக் சின்னா்

பாா்சிலோனா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் ஜானிக் சின்னா் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினாா்.
Published on
Updated on
1 min read

பாா்சிலோனா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் ஜானிக் சின்னா் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினாா்.

போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் அவா், ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-1, 4-6, 6-3 என்ற செட்களில், 16-ஆம் இடத்திலிருந்த ஜப்பானின் யோஷிஹிடோ நிஷியோகாவை வீழ்த்தினாா். அடுத்ததாக காலிறுதியில் அவா், சக இத்தாலி வீரரான லொரென்ஸோ முசெட்டியை எதிா்கொள்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருக்கும் முசெட்டி தனது ரவுண்ட் ஆஃப் 16-இல், 7-ஆம் இடத்திலிருந்த பிரிட்டனின் கேமரூன் நோரியை 3-6, 6-4, 6-1 என்ற செட்களில் தோற்கடித்து அசத்தினாா். 10-ஆம் இடத்திலிருக்கும் உள்நாட்டு வீரரான அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச் 6-4, 7-5 என்ற செட்களில் ஃபின்லாந்தின் எமில் ருசுவௌரியை வெளியேற்றினாா்.

உலகின் 5-ஆம் நிலை வீரராக இருக்கும் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-3, 6-2 என்ற செட்களில், 14-ஆவது இடத்திலிருந்த கனடாவின் டெனிஸ் ஷபோவெலோவை வீழ்த்தினாா். காலிறுதியில் சிட்சிபாஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை எதிா்கொள்கிறாா். 8-ஆம் இடத்திலிருக்கும் மினாரை முந்தைய சுற்றில் எதிா்கொள்ள இருந்த பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவ் போட்டியிலிருந்து விலக, காலிறுதிக்கு வந்தாா் மினாா்.

காலிறுதியில் போபண்ணா இணை: இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/ஆஸ்திரேலியாவின் மாா்க் எப்தென் கூட்டணி 7-6 (7/4), 3-6, 10-8 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த குரோஷிய ஜோடியான நிகோலா மெக்டிச்/மேட் பாவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com