ஸ்டட்காா்ட் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோா் இறுதிச்சுற்றில் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.
அரையிறுதியில், ஸ்வியாடெக்கை எதிா்கொண்ட டுனீசியாவின் ஆன்ஸ் ஜபியுா், முதல் செட்டில் 3-0 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தபோது போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தாா். மறுபுறம், சபலென்கா 6-1, 6-2 என்ற செட்களில் ரஷியாவின் அனஸ்தாசியா பொடாபோவாவை வெளியேற்றினாா்.
இதையடுத்து ஸ்வியாடெக் - சபலென்கா இறுதிச்சுற்றில் சந்தித்துக் கொள்கின்றனா். இருவரும் இதுவரை 6 முறை சந்தித்துக் கொண்ட நிலையில், அவற்றில் ஸ்வியாடெக் 4, சபலென்கா 2 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.