தன்னுடைய வெற்றிக்கான காரணம் குறித்து மனம் திறந்த அர்ஷ்தீப் சிங்

அழுத்தமான சூழலில் அமைதியாக இருப்பது மற்றும் நான் ஓடி வந்து பந்து வீசுவதில் செய்த மாற்றமே இந்த ஐபிஎல் சீசனில் என்னுடைய வெற்றிக்கு காரணம் என பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்
தன்னுடைய வெற்றிக்கான காரணம் குறித்து மனம் திறந்த அர்ஷ்தீப் சிங்

அழுத்தமான சூழலில் அமைதியாக இருப்பது மற்றும் நான் ஓடி வந்து பந்து வீசுவதில் செய்த மாற்றமே இந்த ஐபிஎல் சீசனில் என்னுடைய வெற்றிக்கு காரணம் என பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

பந்து வீசுவதற்கு ஓடி வரும் விதத்தை மாற்றியது நோ-பால் வீசாமல் இருக்க எனக்கு உதவியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் வெற்றிக்குப் பிறகு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: எப்போது விக்கெட் எடுத்தாலும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்த வெற்றி எனக்கு மேலும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நான் ஓடி வந்து பந்து வீசும் விதத்தில் சிறிது மாற்றம் செய்தேன். அவ்வாறு செய்தது நான் நோ-பால் வீசாமல் இருக்க எனக்கு உதவியது. நான் இப்போது விளையாடும் கிரிக்கெட் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அழுத்தமான சூழலில் அமைதியாக இருப்பதும் எனது வெற்றிக்கு முக்கிய காரணம் என்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசிய அர்ஷ்தீப் சிங் 29 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com