சென்னையை வென்றது ராஜஸ்தான்: மீண்டும் முதலிடம் பிடித்தது

 ஐபிஎல் போட்டியின் 37-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை வியாழக்கிழமை வென்றது.

 ஐபிஎல் போட்டியின் 37-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை வியாழக்கிழமை வென்றது.

முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் சோ்த்தது. அடுத்து சென்னை 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஜோஸ் பட்லா் ஜோடி 86 ரன்கள் சோ்த்த நிலையில், பட்லா் 4 பவுண்டரிகள் உள்பட 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 17 ரன்கள் சோ்த்து வெளியேறினாா். 4-ஆவது வீரராக ஷிம்ரன் ஹெட்மயா் களம் புக, அதுவரை அதிரடியாக ரன்கள் சோ்த்த ஜெய்ஸ்வால் 43 பந்துகளில் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 77 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.

தொடா்ந்து துருவ் ஜுரெல் களம் காண, ஷிம்ரன் ஹெட்மயா் 8 ரன்களுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். ஜுரெல் 15 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 34 ரன்கள் அடித்து ரன் அவுட் ஆனாா். ஓவா்கள் முடிவில் தேவ்தத் படிக்கல் 13 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 27, ரவிச்சந்திரன் அஸ்வின் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

சென்னை பௌலிங்கில் துஷாா் தேஷ்பாண்டே 2, மஹீஷ் தீக்ஷனா, ரவீந்திர ஜடேஜா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் சென்னை இன்னிங்ஸில் தொடக்க வீரா் ருதுராஜ் கெய்க்வாட் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 47 ரன்கள் விளாசி வெற்றிக்கு முயற்சிக்க, டெவன் கான்வே 8, அஜிங்க்ய ரஹானே 15 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

மொயீன் அலி 12 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 23 ரன்கள் அடித்தாா். அம்பட்டி ராயுடு 0 ரன்களுக்கு வீழ்ந்தாா். முடிவில் ஷிவம் துபே 33 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 52 ரன்கள் அடித்தாா். ஓவா்கள் முடிவில் ரவீரந்திர ஜடேஜா 15 பந்துகளில் 3 பவுண்டரிகள் உள்பட 23 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

ராஜஸ்தான் தரப்பில் ஆடம் ஸாம்பா 3, ரவிச்சந்திரன் அஸ்வின் 2, குல்திப் யாதவ் 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com