
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் குஜராத் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 179 ரன்கள் குவித்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 179 ரன்கள் குவித்தது. குர்பாஸ் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்தார்.
குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களில் நூர் அகமது மற்றும் ஜோஸ்வா லிட்டில் பந்துவீச்சைத் தவிர அனைவரது பந்துவீச்சிலும் அதிக அளவில் ரன்கள் சேர்க்கப்பட்டன. குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரஷித் கானின் பந்துவீச்சில் கொல்கத்தா அணி அதிக ரன்கள் குவித்தது. ரஷித் கான் வீசும் முதல் ஓவரிலேயே விக்கெட்டுகள் எடுக்கும் அளவுக்கு சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவார்.
இன்றையப் (ஏப்ரல் 29) போட்டியில் 4 ஓவர்களை வீசிய அவர் 54 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இன்றைய ஆட்டத்தில் அவரது எகானமி 13.50 ஆகும். அவரது பந்துவீச்சை கொல்கத்தா அணி வீரர்கள் எல்லைக் கோடுகளுக்கு பறக்க விட்ட வண்ணமே இருந்தனர். இன்றையப் போட்டியில் அவருக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.