இந்திய பேட்ஸ்மேன்களால் நாங்கள் தோற்கவில்லை: மிட்செல் மார்ஷ்

அனுபவமற்ற இந்திய பேட்ஸ்மேன்களால் நாங்கள் சன் ரைசரஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் தோற்கவில்லை என தில்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். 
இந்திய பேட்ஸ்மேன்களால் நாங்கள் தோற்கவில்லை: மிட்செல் மார்ஷ்

அனுபவமற்ற இந்திய பேட்ஸ்மேன்களால் நாங்கள் சன் ரைசரஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் தோற்கவில்லை என தில்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக பேசிய அவர் 198 ரன்கள் இலக்கு இறுதியில் தில்லி அணி வெற்றி பெறுவதற்கு அதிக ரன்களாக மாறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் மிட்செல் மார்ஷ் தனது பந்துவீச்சு மற்றும் பேட்டிங் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தினார். நேற்றையப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய மார்ஷ் 27 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அதன்பின் பேட்டிங்கில் 39 பந்துகளில் அதிரடியாக 63 ரன்கள் குவித்தார். அதில் 1 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். இருப்பினும், அவருக்குப் பின் களமிறங்கிய இந்திய வீரர்கள் சரியாக விளையாடததால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றையப் போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட மிட்செல் மார்ஷுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

போட்டி முடிவடைந்த பிறகு மிட்செல் மார்ஷ் பேசியதாவது: எங்களது அனைத்து வீரர்களின் மேலும் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. எங்களது பேட்டிங் வரிசையில் சில அனுபவமற்ற வீரர்களும் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மீதும் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்களால் இந்தப் போட்டியில் நாங்கள் தோற்றதாக நான் நினைக்கவில்லை. ஆட்டத்தில் சில இடங்களில் நாங்கள் ஒரு அணியாக எங்களை சரி செய்து கொள்ள வேண்டும். அந்த இடத்தில்தான் நாங்கள் தோல்வியடைந்தோம். இந்த சீசன் முழுவதும் எடுத்துக் கொண்டால், நாங்கள் யாரையும் குறை கூற முடியாது. இரண்டு போட்டிகளில் வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியடைந்தோம். ஐபிஎல் போட்டிகளில் வெல்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதே போல இந்த ஆடுகளத்தில் 195 ரன்கள் என்பது அதிக ரன்கள் என நான் நினைக்கிறேன். அபிஷேக் சர்மா மற்றும் ஹென்ரிச் க்ளாசன் சிறப்பாக விளையாடினார்கள் என்றார்.

நேற்றையப் போட்டியில் தில்லி அணியில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் மணீஷ் பாண்டே (1 ரன்), பிரியம் கார்க் (12 ரன்) மற்றும் சர்ப்ராஸ் கான் (9 ரன்) ஆட்டமிழந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com