அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்ற பிரபல இந்திய வீரர்!

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்ற பிரபல இந்திய வீரர்!

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

2008 முதல் 2015 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 12 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் அரசியலில் நுழைந்தார். அரசியலில் இருந்தபோதிலும் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாடி வந்தார். மம்தா பானர்ஜின் அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சராகவும் ஆனார். 2022-2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் போட்டிகளில் மேற்கு வங்கத்துக்காக விளையாடி அந்த அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். அதுவே அவரது கடைசி முதல் தர போட்டியாகும். 

தனது ஓய்வு முடிவு குறித்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டிருப்பதாவது: கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறேன். கிரிக்கெட் எனக்கு அனைத்தையும் கொடுத்தது. எனது வாழ்வில் நான் கடினமான சூழலில் இருந்தபோது எனக்கு கனவிலும் நினைக்காதவற்றை எனக்கு இந்த கிரிக்கெட் கொடுத்தது. நான் கிரிக்கெட் மற்றும் கடவுளுக்கு எப்போதும் நன்றிக் கடன் பட்டிருப்பேன். இந்த பயணம் முழுவதும் கடவுள் எனக்கு உறுதுணையாக இருந்தார் எனப் பதிவிட்டுள்ளார். 

12 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மனோஜ் திவாரி 287 ரன்கள் குவித்துள்ளார். அதில் சென்னையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அவர் அடித்த சதமும் அடங்கும். முதல் தர கிரிக்கெட்டில் 9908 ரன்கள் குவித்துள்ளார். அதில் அவரது சராசரி 48.56 ஆகும். அதில் 29 சதங்கள் அடங்கும். 169 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ள திவாரி 5581 ரன்கள் குவித்துள்ளார். 

கடந்த 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மனோஜ் திவாரி இடம் பெற்று கடைசி ஓவரில் வெற்றிக்குத் தேவையான ரன்களை அடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com