சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஸ்பின் ஜாம்பவான்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து வீரர் டேனியல் வெட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார். 
படம் | ட்விட்டர்
படம் | ட்விட்டர்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து வீரர் டேனியல் வெட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த இரண்டு சீசன்களாக ஹைதராபாத் அணிக்கு பிரையன் லாரா தலைமைப் பயிற்சியாளராக இருந்து வந்த நிலையில் இன்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் சன் ரைசர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அணியில் இணைந்தார் பிரையன் லாரா. அதன்பின், இந்த ஆண்டு டாம் மூடி பார்த்து வந்த ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு லாராவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், ஹைதராபாத் இந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

இந்த நிலையில், இன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நியூசிலாந்தின் அனுபவமிக்க டேனியல் வெட்டோரி சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் தலைமைப் பயிற்சியாளராக ஆரஞ்சு ஆர்மியில் இணைகிறார். அவரை அணி நிர்வாகம் வரவேற்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த பிரையன் லாராவின் பணி நிறைவடைகிறது. சன் ரைசர்ஸ் அணிக்காக நீங்கள் உங்களது சிறப்பான பங்களிப்பை அளித்ததுக்கு நன்றி. உங்களது எதிர்கால பணிகள் சிறக்க வாழ்த்துகிறோம் எனப் பதிவிட்டுள்ளது.

டேனியல் வெட்டோரி இதற்கு முன்னதாக ஐபிஎல் அணிக்கான தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவம் உடையவர். அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். அதேபோல ஆஸ்திரேலிய ஆடவர் அணியின் உதவி பயிற்சியாளராக அண்மையில் செயல்பட்டார். வங்கதேச அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராகவும் அவர் இருந்துள்ளார்.  தற்போது அவர் தி ஹண்ட்ரட்ஸ் போட்டியில் விளையாடி வரும் பிர்மிங்ஹம் பீனிக்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக இருந்தபோது அந்த அணி 2015-ல் பிளே ஆஃப் செல்வதற்கும், 2016-ல் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கும் உறுதுணையாக இருந்துள்ளார். 

கடந்த 6 ஐபிஎல் சீசன்களில் 5 முறை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அதன் தலைமைப் பயிற்சியாளரை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com