மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் 3 போட்டிகள் குறித்து மனம் திறந்த ஷுப்மன் கில்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் நான் சரியானதை செய்யாததாகவே உணர்கிறேன் என இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். 
மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் 3 போட்டிகள் குறித்து மனம் திறந்த ஷுப்மன் கில்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் நான் சரியானதை செய்யாததாகவே உணர்கிறேன் என இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். 

இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தற்போது டி20  தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில்  வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன. நேற்று நடைபெற்ற 4-வது போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் மூன்று போட்டிகளில் சரியாக விளையாடாத நிலையில், நேற்றையப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு ஷுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் 165 ரன்கள் சேர்த்தனர். தொடக்க வீரர்களின் இந்த அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.

முதல் மூன்று போட்டிகளில் ஷுப்மன் கில் 3, 7, 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். முதல் 3 போட்டிகள் அவருக்கு சரியானதாக அமையவில்லை. இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் நான் சரியானதை செய்யாததாகவே உணர்கிறேன் என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து ஷுப்மன் கில் பேசியதாவது: முதல் மூன்று போட்டிகளில் என்னால் 10 ரன்கள் கூட சேர்க்க முடியவில்லை. ஆனால், நேற்றையப் போட்டியில் ஆடுகளம் பேட்டிங்குக்கு சிறப்பானதாக அமைந்தது. அதனால், நான் அதனை பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். எனக்கு நல்ல  தொடக்கம் கிடைத்தவுடன் அதிரடியாக ஆடத் தொடங்கினேன். 3-4 போட்டிகளில் உங்களது சிறந்த ஷாட் கேட்ச் ஆனால் அது ஏமாற்றமாக இருக்கும். அப்போது உங்களது சிறப்பான ஆட்டத்தை சிறிது, சிறிதாக தொடங்க வேண்டும். அப்படி விளையாடும்போது ஏதேனும் தவறு செய்கிறீர்களா என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதன் அடிப்படையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் 3 போட்டிகளில் நான் தவறு செய்ததாக உணரவில்லை. ஆனால், கொடுத்த தொடக்கத்தை ரன்களாக என்னால் மாற்ற முடியவில்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com