இது மிக மிக சாதாரணமான இந்திய அணி: கடுமையாக விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்!

இந்திய டி20 அணி மிக மிக சாதாரண அணியாக இருப்பதாகவும், அவர்கள் கற்பனை உலகில் வாழ்வதாகவும் இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் இந்திய அணியை கடுமையாக சாடியுள்ளார்.
இது மிக மிக சாதாரணமான இந்திய அணி: கடுமையாக விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்!

இந்திய டி20 அணி மிக மிக சாதாரண அணியாக இருப்பதாகவும், அவர்கள் கற்பனை உலகில் வாழ்வதாகவும் இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் இந்திய அணியை கடுமையாக சாடியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-3 என்ற கணக்கில் இழந்ததையடுத்து அவர் இவ்வாறு கடுமையாக விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த சில நாள்களாக இந்திய டி20 அணி மிக, மிக சாதாரண அணியாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியாமல் திணறிய மேற்கிந்தியத் தீவுகள் இந்திய அணியை வீழ்த்தியுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் நாம் தோல்வியடைந்திருந்தோம். தோல்விக்கு ஏதாவது காரணம் கூறாமல் வெற்றி பெறுவதற்கு என்ன செய்வது என்பது குறித்து சிந்திக்க வேண்டும். 50 ஓவர் உலகக் கோப்பைக்கு மேற்கிந்தியத் தீவுகள் தகுதி பெறாத போதிலும் குறுகிய வடிவிலான ஆட்டங்களில் அந்த அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்திய அணி அதன் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்திய அணியின் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை குறைவாகவே உள்ளது. அதிக நேரங்களில் இந்திய அணியின் கேப்டன் என்ன செய்வதென்று தெரியாமல் செயல்படுகிறார். இந்த தோல்விக்கு இந்திய அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகிய இருவருமே பொறுப்பு எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com