ஆசியப் போட்டி: விலகுகிறார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்!

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆசிய விளையாட்டிலிருந்து வினேஷ் போகத் விலகியுள்ளார். 
வினேஷ் போகத் (கோப்புப் படம்)
வினேஷ் போகத் (கோப்புப் படம்)

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆசிய விளையாட்டிலிருந்து வினேஷ் போகத் விலகியுள்ளார். 

சீனாவின் ஹங்ஷோ பகுதியில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப்போட்டியில் இந்தியாவிலிருந்து ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். 

இந்நிலையில், பயிற்சியின்போது மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தின் காரணமாக அறுவைசிகிச்சை செய்யவுள்ளதால், ஆசிய போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள வினேஷ் போகத், சோகமான செய்தியை நான் பகிர்கிறேன். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஆக. 13ஆம் தேதி பயிற்சியின்போது இடதுகாலில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனையின் முடிவில், அறுவைசிகிச்சை செய்தாக வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நான் ஆக. 17ஆம் தேதி அறுவை சிகிச்சைக்காக மும்பை செல்கிறேன். 2018ஆம் ஆண்டு இந்திய நாட்டுக்காக விளையாடி நான் வென்ற ஆசியப் போட்டி தங்கப்பதக்கத்தை தக்கவைக்க வேண்டும் என்பது என் நீண்டகால கனவு. ஆனால், எதிர்பாராதவிதமாக நான் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளேன். இதனால், மாற்று வீராங்கனையை போட்டிக்கு அனுப்ப முடியும்.

என் ரசிகர்கள் எனக்கு துணை நிற்க வேண்டும். அவர்களால் நான் விரைந்து குணமடைந்து 2024ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com