இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தயாராகும் பாட் கம்மின்ஸ்!

அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தயாராகி வருகிறார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தயாராகும் பாட் கம்மின்ஸ்!

அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தயாராகி வருகிறார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ஆஷஸ் கடைசி டெஸ்டின்போது அவரது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், அவர் 6 வாரங்களுக்கு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் ஒருநாள் கொண்ட தொடரில் பாட் கம்மின்ஸ் விளையாடுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா விளையாடவுள்ளது. இந்தப் போட்டிகள் வருகிற செப்டம்பர் 22,24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில், அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தயாராகி வருகிறார்.

இது குறித்து பாட் கம்மின்ஸ் கூறியதாவது: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் இறுதிக் கட்டத்தில் நான் அணியுடன் இணைய உள்ளேன். ஆனால், இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெற உள்ளதால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மிக முக்கியமானது. எனது கை மணிக்கட்டு எலும்பு முறிவு மிக மோசமாக ஆகாது என நம்புகிறேன். அடுத்த சில வாரங்களில் முழுமையாக குணமடைந்து விடுவேன் என நம்புகிறேன். முழுமையாக குணமடைந்து இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் சிறப்பான பங்களிப்பை வழங்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com