அல்காரஸின் விடாமுயற்சி எனக்கு நடாலை நினைவுப்படுத்தியது: ஜோகோவிச்

சின்சினாட்சி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் நடாலை குறித்து பேசியுள்ளார். 
அல்காரஸ், ஜோகோவிச், நடால்.
அல்காரஸ், ஜோகோவிச், நடால்.

சின்சினாட்சி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பா் 1 வீரா் காா்லோஸ் அல்காரஸும், 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஜோகோவிச்சும் மோதினர். 

3 மணி நேரம் 49 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் இறுதிச் சுற்றில் முதல் செட்டை 5-7 என ஜோகோவிச் இழந்தாலும் இரண்டாவது மூன்றாவது செட் முறையே 7-6(7), 7-6(4) என கைப்பற்றினார். விம்பிள்டனில் விட்டதை இங்கு சாதித்து காட்டினார் ஜோகோவிச். 

இது ஜோகோவிச்சின் 3வது சின்சினாட்சி ஓபன் சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 2012இல் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ரபேல் நடாலிடம் 5 மணி நேரம் 53 நிமிடங்கள் விளையாடியது போலிருந்ததாக கூறினார். 

இந்த வெற்றிக்குப் பிறகு ஜோகோவிச், “எனது வாழ்க்கையில் இந்த மாதிரி போட்டிகள் அதிகம் விளையாடவில்லை. இதை நான் 2012இல் ரஃபேல் நடாலுடன்  ஆடியதை ஒப்பிடுவேன். இந்த 3 செட்டுகளும் கிட்டதட்ட 4 மணி நேரம் விளையாடினோம். 20 வயதில் அல்காரஸ் அழுத்ததினை சிறப்பாக கையாண்டார். நான் நடாலினை எதிர்கொண்டது போல இருந்தது அலகாரஸ் விளையாடியதும்” எனக் கூறினார். 

மேலும், ஜோகோவிச், “அலகராஸ் விட்டுக் கொடுக்கவே இல்லை” எனக் கூறிக்கொண்டிருக்கும் போது அல்காரஸ், “ஸ்பானியர்கள்..”என கூற வந்தார். உடனே ஜோகோவிச், “ஆமாம், ஸ்பானியர்கள் எளிதில் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். நான் இதை முன்பே கேட்டிருக்கிறேன். அனுபவித்தும் இருக்கிறேன்” என ஜாலியாக கூறினார். 

அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பட்டியலில் ஜோகோவிச் 23 உடன் முதல் நிலையில் இருக்கிறார். நடால் (22) இரண்டாமிடம். பெடரர் (20) 3வது இடத்தில் இருக்கிறார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com