செரீனா வில்லியம்ஸுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது

செரீனா வில்லியம்ஸுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது

மிக முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக இருந்த செரீனா வில்லியம்ஸுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.
Published on


வாஷிங்டன்: மிக முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக இருந்த செரீனா வில்லியம்ஸுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.

செரீனா வில்லியம்ஸ் - அலெக்சிஸ் ஒஹானியன் தம்பதி தாங்கள் மீண்டும் பெற்றோராகியிருப்பதாகவும், இரண்டாவது பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் மகிழ்ச்சியோடு அறிவித்துள்ளனர்.

இது குறித்து அலெக்சிஸ், இன்ஸ்டகிராம் பக்கத்தில், புதிய குடும்ப உறுப்பினரின் புகைப்படங்களை பதிவிட்டு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

முதல் புகைப்படத்தில், தங்களது தேவதைகளுடன் பெற்றோர் இருக்கும் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அடுத்து, தனது தங்கையுடன் முதல் மகள் அலெக்சிஸ் ஒலிம்பியா ஒஹானியன் ஜூனியர் இடம்பெற்றுள்ளார்.

இரண்டாவது பெண் குழந்தைக்கு ஆதிரா ரிவெர் ஒஹானியன் என்று பெயர் சூட்டியுள்ளனர். எங்கள் வீடு, அன்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கிய குழந்தை மற்றும் தாயுடன் நிறைந்திருக்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.உங்கள் அமைதி, ஆற்றைப் போலவும், உங்கள் ஆரோக்கியம் கடல் அலைப் போலவும் இருக்கும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரவியதும், டென்னிஸ் நட்சத்திரங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை மலைப்போல குவித்து வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com