ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு பெற விரும்பவில்லை: வாரன் கிரைக்

ஸ்டீவ் ஸ்மித் தற்போது ஓய்வு பெற விரும்பவில்லை என அவரது மேலாளர் வாரன் கிரைக் தெரிவித்துள்ளார். 
ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு பெற விரும்பவில்லை:  வாரன் கிரைக்

ஸ்டீவ் ஸ்மித் தற்போது ஓய்வு பெற விரும்பவில்லை என அவரது மேலாளர் வாரன் கிரைக் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக சிட்னியில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற உள்ளதாக தனது விருப்பத்தை வார்னர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் தற்போது ஓய்வு பெற விரும்பவில்லை என அவரது மேலாளர் வாரன் கிரைக் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஸ்டீவ் ஸ்மித்தின் ஓய்வு முடிவு குறித்து தற்போது கூறுவதற்கு எதுவும் இல்லை. அவர் டெஸ்ட் போட்டிகளில் நிறைய சாதிக்க வேண்டும் என விரும்புகிறார் என்றார். 

ஆஸ்திரேலிய அணிக்காக ஸ்டீவ் ஸ்மித் நிறைய சாதனைகளைப் படைத்துள்ளார். மூன்று ஆஷஸ் தொடர்கள், 2015 மற்றும் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2021 டி20 உலகக் கோப்பை மற்றும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியின் ஒரு அங்கமாக ஸ்டீவ் ஸ்மித் இருந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம்  ரன்களை நெருங்கி வருகிறார். டெஸ்ட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை அவர் எடுக்கும்பட்சத்தில், டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 4-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். அவருக்கு முன்னதாக, ஆலன் பார்டர், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் ஆகியோர் இந்தப் பட்டியலில் முதல் 3  இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com