
அயர்லாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 6 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் குவித்துள்ளது.
அயர்லாந்து அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரின் மூன்றாவது போட்டி இன்று (டிசம்பர் 10) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, ஜிம்பாப்வே முதலில் பேட் செய்தது.
ஜிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் கேப்டன் ரியான் பர்ல் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கிளைவ் மடாண்ட் மற்றும் பிரியன் பென்னட் தலா 27 ரன்கள் எடுத்தனர். அயர்லாந்து தரப்பில் ஜோஷ்வா லிட்டில், கேரத் டெலானி மற்றும் கிரைக் யங் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து களமிறங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரில் சமநிலையில் உள்ளதால், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்போடு இரு அணிகளும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.