கிரிக்கெட் மீதான ஈடுபாடு குறைந்துவிட்டது: ஆசாத் ஷஃபிக்

பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் பேட்டர் ஆசாத் ஷஃபிக் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.
கிரிக்கெட் மீதான ஈடுபாடு குறைந்துவிட்டது: ஆசாத் ஷஃபிக்

பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் பேட்டர் ஆசாத் ஷஃபிக் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.

37 வயதான இவர் கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் 2020இல் விளையாடினார். 77 டெஸ்ட்டில் விளையாடி 4,660 ரன்களும் 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,336 ரன்களும் 10 டி20 போட்டிகளில் 192 ரன்களும் எடுத்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 12,042 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். 

பாகிஸ்தான் பேட்டர் ஆசாத் ஷஃபிக் (37), அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். தற்போது அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் தேசிய தேர்வாளராக பணிபுரிய இருக்கிறார். 

இது குறித்து அவர், “முன்பு இருந்த கிரிக்கெட் மீதான ஈடுபாடு குறைந்து விட்டது. மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் உடற்தகுதியும் இல்லையென கருகிறேன். அதனால்தான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளேன்.

2020க்குப் பிறகு உள்ளூர் போட்டிகளில் 3 வருடம் விளையாடினேன். எப்படியாவது தேசிய அணியில் இடம் கிடைக்குமென நம்பிக்கையில் இருந்தேன்.  38 வயதில் மற்றவர்கள் என்னை எதுவும் சொல்லும் முன்பு நானாகவே வெளியேற விரும்புகிறேன். இந்த சீஷன் தொடங்கும் முன்பே முடிவு செய்து விட்டேன். 

2010 ஸ்பாட் பிக்ஸிங் பிரச்னைக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நிலைமை மோசமாக இருந்தது. மக்கள் மனதில் நம்பிக்கையூட்டும் விதமாக நாங்கள் விளையாடியது மகிழ்ச்சி. அந்த நேரத்தில் என்னுடைய பங்களிப்பு குறித்து இப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார். 

2010இல் இங்கிலாந்துக்கு எதிரான  போட்டியில் சல்மான் பட் கேப்டனாக இருக்கும்போது மொஹமது ஆசிப், மொஹமது ஆமிர் ஆகியோர் நோ பால் வீசி சூதாட்டத்தில் (ஸ்பாட் ப்க்சிங்) சிக்கினார்கள். அதனால் சல்மான் பட் 10 ஆண்டுகளும் ஆசிப், ஆமிர் முறையே 7, 5 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டனர். 

இந்த 2010 சூதாட்டப் பிரச்னைக்குப் பிறகு மிஸ்பா உல் ஹக் தலைமையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புத்துயிர்ப்புக்கு ஆசாத் ஷஃபிக்கின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com